புதுக்கோட்டை, மே. 24-
புதுக்கோட்டை இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் போலீசார் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக பழனியப்பா முக்கத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை கட்சியினருடன் அவர் ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தை கண்காணிப்பு பிரிவினர் வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரம் செட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை என்று வீடியோ கண்காணிப்புபிரிவு துணை தாசில்தார் ராஜசேகரன், புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன் மீது, டவுன் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் வழக்குப்பதிவு செய்துள் ளார். முன்னதாக நேற்று முன் தினம் அனுமதியின்றி கட்சி நோட்டீஸ் ஒட்டியதாக பாரதீய ஜன சேவா கட்சி மீது, நகராட்சி ஆணையர் சர்தார் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் பணம் கொண்டு வரப்பட்டது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கட்சி போஸ்டர்களை அகற்றாததாக அ.தி.மு.க. மீது 2, இந்திய ஜனநாயக கட்சி மீது 2, தி.மு.க. மீது 1, அனுமதியின்றி ஊர்வலம் வந்ததாக தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன் மற்றும் கட்சியினர் மீது 1 வழக்கு, முன் அனுமதியின்றி ஊர்வலம் வந்ததாக அண்ணா தொழிற்சங்கத்தினர் மீது 1 வழக்கு, ச.ம.க.வினர் மீது 1 வழக்கு, ட்ரம் செட்டுக்கு அனுமதி பெறவில்லை என இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் மீது 1 வழக்கு, அனுமதியின்றி கட்சி நோட்டீஸ் ஒட்டியதாக பாரதீய ஜன சேவா கட்சி மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக இதுவரை மொத்தம் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments