Tuesday, May 15, 2012

thumbnail

நேபாள விமான விபத்தில் பலியான அர்ச்சகர் மகள் கண்ணீர் பேட்டி

விமான விபத்தில் பலியான கும்பகோணம் சுதர்சன் பட்டாச்சாரியார் மகள் அமுதப் பிரியா கண்ணீர் மல்க கூறியதாவது:-
 
எனது தந்தை வேதம் படித்தவர். பொதுமக்களிடம் அன்பாக பேசும் தன்மை உள்ளவர். அவருக்கு தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும். 2 முறை அமெரிக்கா சென்று அங்குள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி வந்துள்ளார். அவரது மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் துக்கத்தில் உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சுதர்சன் பட்டாச்சாரியாரின் மனைவி சாந்தி, தாய் சூர்யா, தம்பி சவுந்தரராஜன் ஆகியோர் கதறி அழுத வண்ணம் உள்ளனர். சுதர்சன் பட்டாச்சாரியார் உடல் விமானம் மூலம் டெல்லிகொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்படும் என தெரிகிறது. அதனை திருச்சிக்கு விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About