சென்னையில் இன்று 107 டிகிரி வெயில்
19 May 2012 02:55:41 PM IST சென்னை, மே, 19 : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கியதில் இருந்தே சென்னையில் 106 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு இருந்தது. இந்த நிலையில் இன்று 107 டிகிரியாக வெயிலின் அளவு பதிவாகியுள்ளதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் வீட்டில் மக்கள் தூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வீட்டின் மாடியில்தான் தங்கள் தூக்கத்தை கழிக்கின்றனர். பல பேர் கொள்ளையர்களுக்கு பயந்து அனல் வீட்டிலேயே தூங்குகின்றனர்.
அக்னி வெயிலால் பலருக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் பொக்கலங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர்களை வெயிலில் நடமாடினார் பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.
மேலும், அக்னி நட்சத்திரம் முடியும் முன்பு, இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 109 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
10:29
Tags :
109 டிகிரி வெயில்
,
chennai sun 107 c
,
latest news tamilnadu .tamilan
,
latest tamil news
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments