Sunday, May 13, 2012

thumbnail

கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கிட தே.மு.தி.க.,வினர் கோரிக்கை

விழுப்புரம் : கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டுமென மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர்.மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளரான வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ராஜசந்திரசேகர், வக்கீல் துரைசாமி, மாவட்ட நிர்வாகிகள் செஞ்சி சிவா, முருகன், புரு÷ஷாத்தமன், கோவிந்தராஜ், ரமேஷ், கணேசன், உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.,வை எதிர்த்து தே.மு.தி.க.,போட்டியிட முடிவு செய்துள்ளதற்கு கட்சி தலைவர் விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவித்தும், சட்டசபையில் எதிர் கட்சிகள் மக்களின் பிரச்னைகளை பேச விடாமல் தடுக்கும் அரசிற்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும் வெட்டுக் கூலிக்கு ஏற்ப கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட நிர்வா கிகள் ஏழுமலை, பிரபாகரன், பிரபு, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கோவிந்தன், பாண்டியன், தயாநிதி, நல்லதம்பி, நகர நிர்வாகிகள் பாபு, அகில், சவுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About