நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்
ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்
இசை: மனு ரமேசன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: ஜே மகாலட்சுமி
எழுத்து - இயக்கம்: கே எஸ் தங்கசாமி
தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.
புதுமுகங்கள் நடிக்க புதிய இயக்குநர் தங்கசாமி எழுதி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதன் விளைவு அந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை படத்தைத் தயாரித்த மதன்,வாங்கி வெளியிட முடிவு செய்தார். அவருடன் இப்போது வேந்தர் பிலிம்ஸ் மதனும் இணைந்து கொண்டார். இதனால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. இதனால் இதுபோன்ற புதுமுகங்களின் படத்துக்கு வியாபாரம் என்பதே இல்லை என்பதைப் பொய்யாக்கி இந்தப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம். இந்நிலையில் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஒரு கோடி கொடுத்து சன்தொலைக்காட்சி வாங்கிவிட்டதாம்.
இதனால் படத்தின் தயாரிப்பாளருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.காரணம்,படத்தின் மொத்த பட்ஜெட்டே தொண்ணூறு இலட்சம்தான் என்கிறார்கள். அந்தப் பணத்தைச் செலவிட்டு படத்தை எடுத்து முடித்த நேரத்தில் படத்தை வெளியிடுவதற்காக மதன்கள் வாங்கிக்கொண்டதால் விளம்பரச் செலவுகள் அனைத்தும் அவர்களையே சேர்ந்துவிட்டது. இதனால் ஒரு சின்னச் சிக்கல் கூட இல்லாமல் போட்ட பணத்தை எடுத்துவிட்ட தோடு படம் ஓடுகிற அளவுக்கு இலாபத்தையும் பார்க்க முடியும் என்கிற ஒப்பந்தமும் இருப்பதால் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
அதோடு அடுத்து ஒரு படத்தை இயக்க இதே இயக்குநரிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சினிமா ரொம்ப ரொம்ப நல்ல தொழில்.
05:16
Tags :
cinema movie
,
latest tamil news
,
madhan
,
radinam film
,
sun tv
,
Tamil cinema news
,
venthar films
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments