பண்டிகைகள்
பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள், நாட்டை ஒருங்கிணைக்கும் ஆற்றலும், மக்களுக்கு புத்துணர்வளிக்கும் திறனும் கொண்டவையாக விளங்குகின்றன.

பாரத நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு
அடிப்படைக் காரணத்துக்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே
உள்ளது. எனினும் நாடு நெடுகிலும் பரவலாகவும், ஒத்த சிந்தனையுடனும்
கொண்டாடப்படும் விழாக்கள் சில மட்டுமே. அவற்றுள் தலையாயது தீபாவளி.
தீபாவளி
நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.
நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.
எனினும், அந்த அன்னையின் மனம் மகிழவும், சாகும் முன் திருந்திய அரக்கனின்
மனம் குளிரவும், அவன் கேட்ட வரத்தின்படி, அதிகாலையில் நரகாசூரனை நினைந்து
எண்ணெய்க் குளியல் நடத்தி, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து,
நன்மை எங்கும் ஓங்க பிரார்த்தனை செய்கின்றோம்.
ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி திருநாள்
முன்பதிவு
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லுபவர்கள் பஸ் /ரயில் முன்பதிவு செய்து செல்லுவார்கள் .முன்பதிவு செய்யவில்லை என்றால் முதல் நாள் லீவ் எடுத்து கிடைக்கிற வண்டியே மேல் என்று செல்ல வேண்டியது தான்.
புத்தாடை
புத்தாடை வீட்டில் உள்ள அனைவர்க்கும் வாங்க கடைத்தெரு சென்று அவர்ர வரகளுக்கு பிடித்த உடை வாங்கி தையல் கடை காரரிடம் சரியாய் தைக்க அளவு கொடுத்து தீபாவளி முன் கொடுக்க சொல்வதும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு ரெடிமேட் துணி .
பட்டாசு ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி திருநாள்
முன்பதிவு
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லுபவர்கள் பஸ் /ரயில் முன்பதிவு செய்து செல்லுவார்கள் .முன்பதிவு செய்யவில்லை என்றால் முதல் நாள் லீவ் எடுத்து கிடைக்கிற வண்டியே மேல் என்று செல்ல வேண்டியது தான்.
புத்தாடை
புத்தாடை வீட்டில் உள்ள அனைவர்க்கும் வாங்க கடைத்தெரு சென்று அவர்ர வரகளுக்கு பிடித்த உடை வாங்கி தையல் கடை காரரிடம் சரியாய் தைக்க அளவு கொடுத்து தீபாவளி முன் கொடுக்க சொல்வதும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு ரெடிமேட் துணி .
அண்மையில் சிவகாசி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்து காரணமாக,இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு கடைகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்க முடிவு செய்துள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை, பிளாட்பார, தெருவோர கடைகளுக்கு தடை விதித்துள்ளது .
பட்டாசு வகைகள்
குருவி வெடி, லட்சுமி வெடி, ஜம்போ வெடி, டபுள் சவுண்டு வெடி,சங்குசக்கரம் ,சாட்டை.புஸ்வானம் ,பாம்பு மாத்திரை ,ராக்கெட் ,அணுகுண்டு , சரவெடி , கம்பி மத்தாப்பு,டிவி
டவர், ஏரியல் அவுட், மேஜிக் ட்ரீ, கோல்டன் ஸ்பைடர் போன்ற பேன்சி
பட்டாசுகளும், ஸ்டார் பயர் எனப்படும் பல வண்ண பட்டாசுகளும்,வாங்கி வைத்திருப்பர் .
தீபாவளி முதல் நாள் இரவு
அம்மா & பாட்டி செய்யும்
தீபாவளி பலகாரங்கள்
முறுக்கு
லட்டு
அதிரசம்
மைசூர் பாகு பட்சணங்களை ருசி பார்த்து
நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவது வாழ்த்து செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி கூறுவது என்று அலை பேசி அன்று எல்லாரிடமும் பிசி தான்
தீபாவளி அன்று
விறகு அடுப்பில் தவலையில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் ஒரு வாளி எடுத்து
குளிக்கப் போய், நாலடி பாத்ரூமில்
கங்கா ஸ்நானம் செய்து கண்ணில்
சீயக்காய்ச் சிவப்புடன் வெளி வந்து, தீபாவளி
மருந்து வாங்கி, பாட்டி கையால்
புதுத் துணி கையில் வாங்கி
காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளே
ஓடி ...
புத்தாடையுடன்
வெளி வந்து, சாமிக்கு, பெரியவங்களுக்கு
நமஸ்காரம் செய்து, சாஸ்திரத்துக்கு
வெடி வெடிக்கத் தொடங்கி
பேசி,
சிரித்து, முறைத்து, சண்டையிட்டு, கூடி மகிழ்ந்து
இட்லி,
பஜ்ஜி,
சாம்பார்,
சுழியம் உளுந்து வடை
பலகாரங்கள்
என்று சாப்பிட்டு
மிஞ்சிய வெடிகளை பத்திரப் படுத்தி, வெடிக்காத வெடிகளை மருந்தை வெளியில் எடுத்து பேப்பரில் கொட்டி கொளுத்தி, கைக்காயம் கால்காயம் பட்டு, பெற்றவர்களை டென்ஷன் ஏற்றி ...
இதேல்லாம் இல்லாமல்
எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சுற்றம் ,சொந்தங்கள் ,நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியுடன் வருண பகவான் ஒத்துழைப்புடன் இந்த தீபாவளியை கொண்டாடுவோம் .
தீபாவளி வாழ்த்து
தீப ஒளி நமது அறிவைப் பெருக்கி, அறியாமை இருளகற்றி, வற்றாத இறையருளை இல்லமெங்கும் பாய்ச்சட்டும்!
இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆப்பிள் தனது புதிய ஐபோன் 5ஐ இந்தியாவில் களமிறகியுள்ளது .

04:50
Tags :
depavali
,
iphone 5
,
latest Tamil Nadu news
,
Wishing you and your family A Happy Diwali
,
தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்
,
நரகாசூரன்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments