புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்து
‘புதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி
சேனல் 23.10.13
முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார்.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன.

பொழுதுகள்
போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை
உணர்த்தும் வகையில் காலை முதல்
இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும்
வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.புதிய கோணத்தில்இந்த டிவியில்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல்
நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.
அழ வைக்காத சீரியல்கள்வீட்டுப் பெண்களை
அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற
உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் நோக்கமுமின்றி, நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு , கொண்டாட்டம் அதே சமயத்தில் வாழ்க்கை
மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் கொண்டதாய் புதுயுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.சன் நியூஸ் சேனலுக்கு
போட்டியாக புதிய தலைமுறை ஒளிபரப்பாவதைப்
போர சன்டிவி சேனலுக்கு கடுமையான
போட்டியை புதுயுகம் சேனல் உருவாக்கும் என்கின்றனர்
ஊடக உலகத்தினர்
22:09
Tags :
puthiyathalaimurai
,
puthu yugam tv
,
sathyanarayanan
,
SRM university
,
trp
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
1 Comments
best of luck...
Reply Delete