Monday, October 14, 2013

thumbnail

புயல்களும் பெயர்களும்

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அறிந்திருப்போம். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது ?

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
அரசியல்வாதிகளின் பெயர்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது.
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954 ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004 ஆம் ஆண்டில் உருவானது.
இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.
இந்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.
நாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது.
இந்தியா வைத்த பெயர்
ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். சமீபத்தில் நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கிய தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.
தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
இதையடுத்து, பட்டியலில் தாய்லாந்து கொடுத்துள்ள பைலின் என்ற பெயர், இந்த புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நாடுகள்
1
2
3
4
5
6
7
8
வங்கதேசம்
Onil
Ogni
Nisha
Giri
Helen
Chapala
Ockhi
Fani
இந்தியா
Agni
Akash
Bijli
Jal
Lehar
Megh
Sagar
Vayu
மாலத்தீவுகள்
Hibaru
Gonu
Aila
Keila
Madi
Roanu
Makunu
Hikaa
மியான்மர்
Pyarr
Yemyin
Phyan
Thane
Na−nauk
Kyant
Daye
Kyarr
ஓமன்
Baaz
Sidr
Ward
Murjan
Hudhud
Nada
Luban
Maha
பாகிஸ்தான்
Fanoos
Nargis
Laila
Nilam
Nilofar
Vardah
Titli
Bulbul
இலங்கை
Mala
Rashmi
Bandu
Mahasen
Priya
Asiri
Gigum
Soba
தாய்லாந்து
Mukda
Khai−Muk
Phet
Phailin
Komen
Mora
Phethai
Amphan

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About