சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது
- பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.
நெல்லையில் முதல் கொரோனா தடுப்பு ஊசி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு போடப்படுகிறது.
நெல்லை பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைக்கிறார்.
பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த தடுப்பூசி போடப்பட்டுகிறது.
ஏற்கனவே பதிவு செய்திருந்த சுகாதார துறையை சார்ந்த முன்கள பணியாளர்கள் 100 முதல் 150 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 15,100 தடுப்பூசிகள் வந்துள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments