புது தில்லி, மே 15: 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் இருந்த ராசா மாலையில் விடுதலை செய்யப்பட்டார். தினந்தோறும் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கோ தமிழகத்துக்கோ செல்லக் கூடாது என்று ராசாவுக்கு நீதிபதி ஓ.பி. சைனி நிபந்தனை விதித்துள்ளார். 14 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற உத்தரவின் விவரம்: கடந்த 2 மாதங்களாக 42 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று 1,600 பக்கங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. சாட்சிகளைக் கலைக்க குற்றம்சாட்டப்பட்டவர்கள் முயற்சி எடுத்ததாக இதுவரை எந்தப் புகாரும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராசாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இனிமேலும் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படுவது தேவையற்றது. ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவர் ரூ. 20 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரண்டு பேர் தனி நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கோ தமிழகத்துக்கோ செல்லக் கூடாது. நீதிமன்ற விசாரணைக்கு தினமும் ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் கொண்டாட்டம்: சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். ராசாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை அறிய அவரது தொகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். பகல் 11.30 மணிக்கு நீதிபதி ஓ.பி. சைனி அமர்ந்தவுடன் "ஜாமீன் அனுமதிக்கப்பட்டது' என்று மட்டும் கூறினார். இதைக் கேட்ட தொண்டர்கள், ""ஜாமீன் கிடைச்சிடுச்சு'' என்று உரத்த குரலில் தெரிவித்து மகிழ்ந்தனர். நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்றுகொண்டிருந்த தொண்டர்கள் ஆரவாரத்துடன் "ராசா வாழ்க' என்று கோஷமிட்டனர். நீதிபதிக்கு அருகே நின்றிருந்த ராசா, ஜாமீனில் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்டதைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் அவரது மனைவி பரமேஸ்வரி கண் கலங்கியபடி ராசாவை அணைத்து வாழ்த்துத் தெரிவித்தார். அவரது மூத்த சகோதரி விஜயா, தொண்டர்கள் சிலர் கண்ணீருடன் ராசாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கோஷமிட்டனர். கூட்டம் அதிகமானதையடுத்து ராசாவை நீதிமன்ற அறையில் இருந்து போலீஸார் பாதுகாப்புடன் நீதிமன்றச் சிறைக்குக் கொண்டு சென்றனர். அவர் செல்லும் வழியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் சால்வைகளைப் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ராசா, "அமைதியாக இருங்கள்' என்று கூறியபடி சிறைக்குச் சென்றார். அதன் பின்னர் தொண்டர்கள் திமுக கொடிகளை ஏந்தியவாறு ""சிறைக்கு அஞ்சாத ராசா'' என்று கோஷமிட்டபடி பட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பேரணியாகச் சென்றனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர், போலீஸார் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பின்னர் திஹார் சிறை வாயில் வரை சென்ற தொண்டர்கள், அங்கேயும் ராசாவை வரவேற்கக் காத்திருந்தனர். லாக்கப் அறைக்குள் செல்ல திமுக எம்பிக்கள் போட்டி: ராசாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அறிந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சுகவனம், ஆதிசங்கர், ஜின்னா, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், கே.பி. ராமலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத்திலிருந்து பட்டியாலா நீதிமன்றத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ராசாவை மதிய உணவு இடைவேளையின்போது, போட்டி போட்டுக் கொண்டு லாக்கப் அறைக்குச் சென்று சந்தித்தனர். ரூ. 60 லட்சத்துக்கு ஜாமீன்: ராசாவுக்கு ரூ. 20 லட்சம் சொந்த ஜாமீனும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். அதற்கான பத்திரத்தில் ஜாமீன் அளிக்கும் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி சிவா, ஆதிசங்கர் ஆகியோர் பணத்தை கட்டி ஜாமீன் கையெழுத்து போட்டனர். முன்னதாக, கனிமொழி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது, டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் தலா ரூ. 5 லட்சம் ஜாமீன் தொகை வழங்கி கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியளிக்கிறது நீதிமன்ற செயல்பாடுகளில் நாங்கள் எப்போதும் தலையிட்டதில்லை. நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் விஷயம் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிக்க முடியாது. ராசாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருக்கிறது எனில், அதனை நாங்கள் மதிக்கிறோம். - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி

20:17
Tags :
2G Specram
,
a.raja
,
hot news
,
latest tamil news
,
today
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments