திருவனந்தபுரம்: கேரளாவில், பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது: கேரளாவில், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஆணையர் இதுதொடர்பான அறிவிக்கை ஒன்றை, கடந்த 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு கடுமையான முறையில் அமல்படுத்தப்படும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகை புகையிலைப் பொருட்களுக்கு, நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினேன். இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள், மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால், மாநில அரசுகள் தான் தடை விதிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments