Friday, May 18, 2012

thumbnail

அணுஉலையை திறக்கிறது வடகொரியா

சீயோ-ஷன்-ஹூன்: அணு ஆயுத மேம்பாட்டிற்காக வட‌கொரியா அணுஉலை கட்டுமானப்பணியினை துவக்கியிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச்சேர்ந்த ஒரு என்.ஜி.ஓ . வெளியிட்டுள்ளதாவது:
வடகொரியா கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் யாங்க்பையோன் நகரில் யுரேனியம் செறிவூட்டல் மையத்தினை திறந்தது. இதன் மூலம் அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அணுஆயுத மேம்பாட்டிற்காக அணுஉலைகளையும் திறக்க உள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் பையோங்கோங் நகரில் யாங்க்பையோன் பகுதியில் நடந்து வருகிறது.

இதற்கான பணிகள் நடந்து வருவதை கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வர்த்தக ரீதியில் அனுப்பி வைக்கப்பட்ட சாட்டிலைட் ஒன்று புகைப்படத்துடன் ஆதாரம் வெளியிட்டுள்ளது.இவ்வாறு என்.ஜி.ஓ. தெரிவித்துள்ளது.இது குறித்து வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. மின்சக்தி ‌தேவைக்காகவே யுரேனியம் மற்றும் புளுட‌்டோனியம் அடிப்படையிலான அணுஉலைகளை திறக்க உள்ளதாக கூறிவருகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About