சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை பயன்படுத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணி முழுமையாக முடியவில்லை என்று கூறி முன்னதாக சென்னை மாநகராட்சி புதிய கேலரியை பயன்படுத்த அனுமதி மறுத்திருந்தது.மேலும், சிஎம்டிஏ தடையில்லா சான்றிதழ் தராததாலும் அனுமதி மறுக்கப்படிருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் கட்டுமான உறுதிக்கு கிரிக்கெட் வாரியம் அளித்த வாக்குறுதியை அடுத்து இந்த புதிய கேலரியை ஒரு வார காலம் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து,நாளை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக்காண புதிய கேலரியில் உள்ள 12 ,500 இருக்கைகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெற உள்ளது. 500, 700 ரூபாய் டிக்கெட்டுகள் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
07:06
Tags :
20/20 final
,
Breaking News
,
cricket
,
ipl cricket
,
latest news tamilnadu .tamilan
,
stadium
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments