Friday, May 18, 2012

thumbnail

கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்

கீழ்பாக்கம் :கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 4,000 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், உணவு உற்பத்தி, கோழியின உற்பத்தி ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் 2012,13ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த 14,ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் 2,500 விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன.

நாமக்கல், ஒரத்தநாடு, தஞ்சாவூர், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வேலூர், தர்மபுரி, மாதவரம், கோவை, திருச்சி, ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திலும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று வரை 4 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையாகி உள்ளது. இவற்றில், கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கு மட்டும் 3,400 விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கால்நடை மருத்துவ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரஹாசன் தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About