20-05-2012
30 அரசு தொழில்நுட்ப கல்லூரிகளிலும், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் 8-ம் தேதி மாலை 5.45 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கில் தலா 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்களை www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவுஇறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
04:47
Tags :
after 10th
,
Exa latest news tamilnadu .tamilan
,
govt polytechnic admission
,
last date submislication
,
polytechnic admission
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments