Saturday, May 26, 2012

thumbnail

22 நாட்கள் பார்லிமென்டிற்கு வராமல் "டிமிக்கி' கொடுத்த ராகுல்: சபையில் வாயே திறக்காத சோனியா

பாரதத்தின் இளைய தலைவர், காங்., கட்சியில் எப்போது வேண்டுமானாலும், பிரதமர் பதவியை அடைய தகுதி பெற்றவர் என்று கூறப்படும் ராகுல், பார்லிமென்டில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 22 நாட்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை.

35 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 13 நாட்களே சபைக்கு வந்திருந்தார். மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என, சபையின் எந்த பெரிய விவாதங்களிலும் அவர் பங்கு பெறவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா, 16 நாட்கள் சபைக்கு வரவில்லை. எப்போதும் போல், அவர் சபையின் எந்த விவாதங்களிலும் பங்கு பெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாவின் அனைத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளார்.

சம்பளம்:லோக்சபாவின் "இன்னர் லாபி'யில் உறுப்பினர்களுக்கான வருகைப் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும், இந்த பதிவேட்டில் கையொப்பமிட்டால் தான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.அமைச்சர்கள் தத்தம் அமைச்சகங்கள் மூலம் சம்பளம், படி போன்றவைகளை பெறுகின்றனர். அதனால், அமைச்சர்கள் வருகையை லோக்சபா அலுவலகம் பதிவு செய்வதில்லை.

திரிவேதி "டிமிக்கி':சபையின் முன்வரிசையில் அமரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்தக் கூட்டத்தொடரில் 30 நாட்கள் சபைக்கு வரவில்லை. அவருடைய மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியோ ஆறு நாட்கள் தான் சபைக்கு வந்துள்ளார்.ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்து பின்னர் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் திரிவேதி, சபைக்கு, 20 நாள் "டிமிக்கி' கொடுத்துள்ளார். திரிவேதியின் அமைச்சர் பதவியை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிடுங்கிய பிறகு அவரை, சபை பக்கம் காண முடியவில்லை.எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்கள், சபை நடவடிக்கைகளில் பெரும்பாலும் பங்கு பெற்றுள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About