புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து பிரசாரம் செய்ய 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 42 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதியில் வீதி வீதியாக பிரசாரம் செய்கிறார். அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி அவர் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வருகையையொட்டி புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி பல்லவராயன்பத்தை என்ற இடத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான இடத்தை அமைச்சர் என்.சுப்பிரமணியன் 2 முறை ஆய்வு செய்துள்ளார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மலையூர், மேலவிடுதி, மூக்கன்பட்டி, தொண்டமான் விடுதி, வடவாளம், இச்சடி, முள்ளூர், மச்சுவாடி, ஜீவா நகர் வழியாக புதுக்கோட்டை நகருக்கு செல்கிறார்.
அவர் 37 கிலோ மீட்டர் பயணம் செய்து 9 இடங்களில் பேச உள்ளார். பிற்பகலில் பிரசாரத்தை தொடங்கும் அவர் அன்று மாலையே சென்னை திரும்புகிறார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜெயலலிதா பிரசாரம் செய்ய உள்ள இடங் களில் அமைச்சர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வருகையையொட்டி புதுக்கோட்டை தொகுதி அ.தி. மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
04:18
Tags :
aiadmk
,
by-election
,
jayalalitha
,
pudukottai election
,
tamilnadu election
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments