Friday, May 18, 2012

thumbnail

கூடுவாஞ்சேரியில் சூறாவளி: மின்சாரம் துண்டிப்பு

கூடுவாஞ்சேரி :கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மறைமலை நகரில் வேப்ப மரத்தின் கிளை முறிந்து அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து வெடித்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. உடனே மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மறைமலை நகர், வல்லாஞ்சேரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம், பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு, கன்னிவாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணி வரை மின்சாரம் தடைபட்டது. கூடுவாஞ்சேரி காவல் நிலையம், அரசு அலுவலங்கள், பஸ் நிலையம் இருளில் மூழ்கின. நள்ளிரவு ஒரு மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About