Friday, May 25, 2012

thumbnail

ஐபிஎல் டி20 தொடரின் குவாலிபயரில், சென்னை M A சிதம்பரம் ஸ்டேடியத்தில், டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.

சென்னை : ஐபிஎல் டி20 தொடரின்  குவாலிபயரில், சென்னை M A சிதம்பரம்   ஸ்டேடியத்தில், டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ்  முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் முரளி விஜய் 58 பந்துகளில் 113 ரன்களும், ரெய்னா 17 பந்துகளில் 27 ரன்களும்,டோனி 10 பந்துகளில் 23 ரன்களும், பிராவோ 12 பந்துகளில் 33* ரன்களும்  குவித்தனர். டெல்லி அணியில் வருண் ஆரோன் 4 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
  
   223  ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி, சென்னை அணியின் நேர்த்தியான பந்தவீச்சால் 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இமாலய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு துவக்கமே மோசமாக  அமைந்தது. டேவிட் வார்னர்(3 ), சேவாக்(1 ) எடுத்து ஏமாற்றினார், ஜெயவர்த்தனே 37 பந்துகளில் 55 ரன்களும், ராஸ் டெய்லர் 14 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் அஸ்வின் 3.5 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், ஜக்காத்தி 4 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், ஹில்பன்ஹாஸ் 3 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்களையும், ஆல்பி மோர்கல் 3 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்களையும், பிராவோ 3 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும், வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்
 
       .இந்த வெற்றியின் மூலம் பைனலுக்கு முன்னேறியது சென்னை,பரிதாபமாக  வெளியேறியது டெல்லி. வரும் 27 ம் தேதி நடக்கும் பைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது  சென்னை.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About