Monday, May 14, 2012

thumbnail

கொச்சின்- பெங்களூர் கியாஸ் குழாய் திட்டம் விவசாயிகள் பாதிக்கப்படாமல் செயல்படுத்த வேண்டும்: கொங்குநாடு முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்


கொச்சின்- பெங்களூர் இடையே சமையல் கியாஸ் குழாய் திட்டத்தை விவசாயிகள் பாதிக்கபடாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த வேண்டும் என்று கொங்குநாடு முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கொங்குநாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக முழுக்க முழுக்க விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குழாய் செல்லும் இடங்களில் 120 அடி நிலம் எடுக்கப்பபோவதாக மத்திய அரசு அதிகாரிகள் கிராமப்புற விவசாயிகளை பயமுறுத்தி வருகிறார்கள். இந்தக் குழாய் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலையின் வழியாக கொண்டு சென்றால் விவசாய நிலங்களை எடுக்க வேண்டி வராது.

இதைப்பற்றிய தெளிவான விளக்கங்கள் இதுவரை பாதிக்கப்படுபவர்களுக்குத் தரப்படவில்லை. கொங்கு மண்டலம் முழுவதும் விவசாயிகளின் மத்தியில் பூதாகரமாக இந்த பிரச்சினை உருவெடுத்து வருகிறது.

பெரிய போராட்டமாக வெடிப்பதற்கு முன் மாநில அரசு தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டும். இதற்கிடையில் அமைக்கப்பட இருக்கும் எரிவாயு குழாயிலிருந்து கிளைக் குழாய்களை அமைத்து எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.

மாநில அரசு ஒரு கமிட்டியை அமைத்து விவசாய நிலங்களின் வழியாக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கின்ற கொச்சின்- பெங்களூர் குழாயை தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லும் விதமாக மாற்றி அமைக்க வேண்டும்.

இப்போது கோவை மேற்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு தலைமையில் பாதிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களை உறுப்பினர்களாக நியமித்து ஒரு குழுவை அமைத்திருக்கின்றோம். இந்தக் குழு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்கப் பாடுபடும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About