புதுடெல்லி : இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், வாட் வரி சேர்த்து சென்னையில் லிட்டருக்கு ரூ.7.53 விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட்ட பின்னர் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வதற்கு அதிகாரம் தரப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை டிசம்பர் வரை பல முறை உயர்த்தப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் அதன் பிறகு விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கியது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக தடை விதித்தது. பின்னர் நாடாளுமன்றம் கூடியது. அப்போது விலையை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று மத்திய அரசு மவுனம் சாதித்தது.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதனால் பெட்ரோல் விலை மீது லிட்டருக்கு நஷ்டம் ரூ.7.17 ஆனது. அப்படி 5 மாதங்களாக ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ரூ.1 சேர்த்து லிட்டருக்கு ரூ.8.17 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பீடு அதிகரிக்க காரணமானது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததை அடுத்து நேற்று விலை உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தி அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். சென்னையில் வரி சேர்த்து லிட்டர் விலை ரூ.77.53 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வு நேற்று நள்ளிரவே அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments