புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசைன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டிவதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தே.மு.தி.க சார்பில் ஜாகீர் உசைனும் போட்டியிடுகின்றனர்.
ஆனால் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டன. இதனால் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசைன் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் அதிகாரி காவல்துறையினர் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசைன் மீது கணேஷ்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ஜாகீர் உசைன் கூறுகையில், அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்றார். சட்டப்படி இந்த வழக்கை சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
10:32
Tags :
admk
,
by election news
,
ijk
,
latest tamil news
,
mdmk
,
tamilan
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments