Monday, May 21, 2012

thumbnail

தாமதமாக சாப்பிட்டால் கொழுப்பு சத்து ஏற்படும்


கலிபோர்னியா, மே 21- 
 
கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும். எனவே சாப்பாட்டில் அவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
 
தற்போதோ அதுமட்டும் ஒரு காரணம் அல்ல. மிகவும் காலதாமதமாக உணவு சாப்பிட்டாலும்கூட உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து விடும் என கண்டறியப்பட்டுள்ளது.  
 
இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே கண்டுபிடித்துள்ளார். இவரது தலைமையிலான குழுவினர் இதுகுறித்து எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர்.
 
அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About