Showing posts with label latest tamilnadu news. Show all posts

Saturday, October 06, 2012

thumbnail

கருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடும், பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலத்தை கண்டித்து  அறவழியில் தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
 

Friday, October 05, 2012

thumbnail

பணம் பூமிக்கடியில் வளர்கிறது: மன்மோகன் சிங்குக்கு பாபா ராம்தேவ் பதிலடி

பணம் மரத்தில் காய்க்கவில்லை எனக் கூறிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதிலடியாக, பணம் பூமிக்கடியில் வளர்கிறது என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய ராம்தேவ், ‘பணம் பூமிக்கடியில் நிலக்கரி வடிவத்தில் வளர்கிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியும். அதனால்தான் பணம் மரத்தில் காய்க்கவில்லை என அவர் கூறினார்’ என்றார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் எனவும் ராம்தேவ் கேட்டுக்கொண்டார். மேலும், ‘நிலக்கரி ஊழல்தான் உலகில் இதுவரை நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழல். 400 லட்சம் கோடி ரூபாய் இதில் கையாடப்பட்டிருக்கிறது’ எனவும் ராம்தேவ் கூறினார்.
அப்போது, கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற தனது வழக்கமான கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராம்தேவ், ‘எனக்கு யாருடனும் நட்போ, பகையோ கிடையாது. ஆனால் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Thursday, October 04, 2012

thumbnail

விண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலையம்

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் , விண் குப்பைத்துகள் ஒன்றுடன் மோதும் சாத்தியக்கூறைத் தவிர்ப்பதற்காக, வேறு ஒரு சுற்றுப்பாதைக்கு நகர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு விண்வெளி வீரர்கள் வசிக்கும் இந்த நிலையம், உந்தும் ராக்கெட்டுகளை ஏவி, அதன் மூலம், தனது சுற்றுப்பாதையை நோக்கி ஒரு மணிக்கு 28,000 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் விண் குப்பைத்துகளின் பாதையிலிருந்து விலக முயலும்.
பூமியின் அருகாமையில் இருக்கும் விண் சுற்றுப்பாதையில் மட்டும் சுமார் 21,000 அபாயகரமான விண்குப்பைத் துகள்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச விண் நிலையத்தை இயக்குவதில் முக்கியமான ஒரு பகுதியே , இந்த மாதிரி விண் துகள்களின் மீது ஒரு"கண்" வைத்துக்கொண்டிருப்பதுதான்.

ஒரு வாரத்துக்கு முன்னர்தான், இந்த நிலையத்தின் ரஷ்யக்கட்டுப்பாட்டாளர்கள், இரண்டு துகள்கள் நெருங்கியதாகத் தோன்றியபோது, அதைத் தவிர்க்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.
பின்னர் அதை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த நேரத்தில் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிந்தது.
இந்த புதிய அச்சுறுத்தல், கடந்த வாரம் நடந்ததை விட சற்று மேலும் அபாயகரமானது என்று நம்பப்படுகிறது.
இந்த விண் நிலையத்தைப் பொறுத்தவரை, கட்டுப்பாட்டாளர்கள் எந்த ஆபத்தான சாத்தியக்கூறையும் புறக்கணிப்பதில்லை. மோதல் நடப்பதற்கு பத்தாயிரத்தில் ஒரு சாத்தியக்கூறு இருந்தாலே அவர்கள் இந்த நிலையத்தை நகர்த்தி விடுகிறார்கள்.

இந்த ஆண்டு முன்னதாக , ஒரு செய்கோளின் துகள் சர்வதேச விண் நிலையத்தினை நெருங்கிவருவது , மிகத் தாமதாக கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த நிலையத்திலிருந்த விண்வெளி வீரர்கள் ஒரு தப்பிக்கும் கேப்ஸ்யூலில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் இந்த சமயத்தில் அந்த விண் துகள் இந்த நிலையத்தை 23 கிலோமீட்டர் தூரத்தில் மோதாமல் நழுவவிட்டது.
நாசா விண் வெளி ஆராய்ச்சி நிலையம், 10 செண்டிமீட்டருக்கும் பெரிய விண் துகள்களை கண்காணிக்கிறது. இது மாதிரி அளவுள்ள துகள்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் பெருகியிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் 2009ல் இரு செய்கோள்களுக்கிடையே நடந்த மோதல் என்று கூறப்படுகிறது.
2007ம் ஆண்டில் சீனா, தனது செய்கோள் ஒன்றை தாக்கி அழிக்க, ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தியதை அடுத்து, அந்த நடவடிக்கையே, 3,000க்கும் அதிகமான கண்காணிக்க வேண்டிய விண் பொருள் துகள்களை உருவாக்கியது.
ஆனால் தற்போது இந்த விண் வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் வசித்து வரும் ஆறு விண் வெளி வீரர்களுக்கு, இந்த மோதலைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை சற்று சுவாரஸ்யத்தைத் தரும். ஏனென்றால் அவர்கள் சமீபத்தில் உடைந்து போன கழிப்பறையைச் சரி செய்வது போன்ற வேலைகளில்தான் ஈடுபட்டு வந்தனர்.

Tuesday, August 28, 2012

thumbnail

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி: 24,000 பணியாளர்களை நீக்க முடிவு

நியூயார்க்: கம்ப்யூட்டர் உற்பத்தி மற்றும் சாப்ட்வேர் நிறுவனமான எச்.பி (Hewlett-Packard) கடந்த காலாண்டில் ரூ. 45,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஈடிஎஸ் நிறுவனத்தை வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு ரூ. 70,000 கோடி செலவு ஏற்பட்டதாலும் கம்ப்யூட்டர் விற்பனை சரிந்ததாலும் அந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த பெரும் நஷ்டம் காரணமாக பல நாடுகளிலும் பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான எச்.பியில் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 8 சதவீதம் ஊழியர்களை அதாவது, 24,000 பேரை, பணி நீக்கம் செய்ய எச்.பி. முடிவு செய்துள்ளது.

எச்.பியின் கம்ப்யூட்டர்கள் விற்பனை கடந்த காலாண்டில் 10 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக பொருளாதார தேக்க நிலையை சந்தித்து வரும் ஐரோப்பாவிலும், கடும் போட்டி காரணமாக சீனாவிலும் இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.

Wednesday, June 27, 2012

thumbnail

Jayalalithaa files defamation complaint against "Junior Vikatan" -ஜூனியர் விகடன் மீது ஜெ வழக்கு

சென்னை: முதல்‌வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்க‌த்துட‌‌ன் செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் எ‌ன்று அரசு வழ‌க்க‌றிஞ‌ர் செ‌ன்னை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக சென்னை மாவட்ட முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மாநகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்கிறேன். வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன், 24.6.2012 தேதியிட்ட இதழில், 'யாகப்புகையில் போயஸ் கார்டன்; அதிகார பயம்... பரிகார நிஜம்...'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

'போயஸ் கார்டன் மற்றும் பையனூரில் 11 மணி நேரம் யாகம் நடக்க உள்ளது. இந்த யாகம் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலம் சிறப்பாக வேண்டும். எதிரிகளின் பலம் குறையவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது'' என்று எழுதப்பட்டுள்ளது.

செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் பொய்யானது. அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிக ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வருக்கு இப்படி ஒரு யாகம் நடத்த அவசியமில்லை. ஆனால் யாகம் நடத்தப்போவதாக அட்டை படத்தில் முதல்வ‌ரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாக உள்ளது. எனவே ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதுவறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Saturday, June 23, 2012

thumbnail

Kavingar kannadasan birthday,கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்

முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை

மாவட்டம், சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தன

வணிகர் மரபில் பிறந்தார். தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்

பாடலாசிரியர், கவிஞர் ஆவார். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000க்கும்

மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை,

முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது

பெற்றவர்.

கவிஞர் கண்ணதாசன்
இன்று எங்கள்
திருவிழாக் கவிஞனுக்குப் பிறந்தநாள்...


தமிழ்த்தாய்க்கு
மெட்டில் சமைத்து
தட்டில் பரிமாறியவன் நீ- இசைத்
தட்டில் பரிமறியவன் நீ

உனது காதல் பாடல்களைக் கேட்டால்
காற்று
நதியில் குதித்துக் கும்மாளமிடுகிறது...
சோகப் பாடல்களைக் கேட்டால்
பூக்களில்
முகம் புதைத்து அழுகிறது...

ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும்
உன் பாடல்களின் எண்ணிக்கையை வைத்துத்தான்
காற்றின் ஈரப்பதம்
கணக்கிடப்படுகிறது...

-பழநிபாரதி
http://youtu.be/ZC6dRqDmxTQ 
thumbnail

Tamilnadu TNPSC Group IV Exam அரசுத் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கான (குரூப் 4) தேர்வு ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது

அரசுத் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கான (குரூப் 4) தேர்வு ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 10,793 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு சுமார் 12,50,000  விண்ணப்பங்கள வரப்பட்டுள்ளன.  மேற்கண்ட 9 மாவட்டங்களில் மட்டும் 40% பேர் விண்ணப்பபித்துள்ளனர்.

கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வுக்குப் பிறகு இந்த தேர்வுக்குத்தான் அதிகளவில பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ளவர்களில் 47 சேதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

219 தாலுக்காக்களில் உள்ள துணை மையங்களில் 50,000 அறைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். வெளிப்படையாக, நியாயமாக இந்த தேர்வு நடத்தப்பயடும். அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் தேர்வுகளை ஆட்சியர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் முறைகேடுகள் ஏதும் இன்றி தேர்வு நடத்தப்படும். அப்படி தேர்வில் யாரேனும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த மையங்களில் கீழ்த்தளங்களில் தேர்வு அறை அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)

Thursday, June 21, 2012

thumbnail

கவர்னர் ரோசய்யாவிற்கு ஆந்திர கோர்ட் சம்மன்

 அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு அளித்ததாகவும், அதனால் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் தமிழக கவர்னர் ரோசைய்யாவிற்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த ரோசைய்யா, தனக்கு இதுவரை எந்த சம்மனும் கோர்ட் மூலம் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதற்கு சட்டப்படி பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
thumbnail

ஜனாதிபதி தேர்தல்: தந்தையை தொடர்ந்து அகதா சங்மாவும் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுகிறார்

புதுடெல்லி, ஜூன்.21-  
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
 
எனவே சங்மா தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. சங்மா வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. எனவே சங்மா தேசியவாத காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியியை நேற்று ராஜினாமா செய்தார்.
 
சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அகதா அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிப்பார் என இன்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அகதா கலந்து கொள்ளவில்லை. 'தவிர்க்க இயலாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை’ என கட்சி தலைவர் சரத்பவாருக்கு சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.
 
எனவே அகதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. அகதா விரைவில், தனது தந்தைக்கு ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது 29 வயதாகும் அகதா, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர்தான் இந்தியாவின் மிக இள வயது எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, June 18, 2012

thumbnail

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை

சென்னை:இந்திய மருத்துவ கவுன்சிலின், (எம்.சி.ஐ.,) அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின்கீழ் வரும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு, வரும் ஜூலை 5ம் தேதி துவங்க உள்ளது. முறையான உள்கட்டமைப்பு வசதி, போதிய பேராசிரியர்கள் இல்லாததோடு, எம்.சி.ஐ.,யின் ஆய்வின் போது, வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போலி அடையாள அட்டை வழங்கியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள், எம்.சி.ஐ.,யின் அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மட்டும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் வருவதால், இக்கல்லூரி வரும் பொது கலந்தாய்வில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விளக்கம் தர யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறும்போது, ""தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருக்கிறதா அல்லது நடவடிக்கை என்ன என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை,'' எனத் தெரிவித்தனர்.

Sunday, June 17, 2012

thumbnail

ஜனாதிபதி தேர்தல்: அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் பிரணாப் முகர்ஜி வெற்றியை பாதிக்கும்


ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய கட்சி பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட ஓட்டபோட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசிய முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே எந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுபோடுகிறார்கள் என்பது தெரியாது. இதைவைத்து அப்துல் கலாமுக்கு ஆதரவாக கட்சிமாறி ஓட்டபோட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
அப்துல் கலாமுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதால் அவரை பலரும் ஆதரிக்க தயாராக உள்ளனர். எனவே கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் பிரணாப் முகர்ஜிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
பாராளுமன்றம்- சட்டமன்றத்தில் நடக்கும் மற்ற விஷயங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடும் போது கட்சி கொறடாவின் உத்தரவை ஏற்று ஓட்டுபோட வேண்டும். அதை மீறினால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்த முறை பொருந்தாது. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுபோடலாம்.
1969-ம் ஆண்டு ஜாகீர் உசேன் மரணத்தை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவி ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆனால் பிரதமர் இந்திராகாந்தி வி.வி.கிரியை தனியாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.
காங்கிரசுக்கு இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைபடி சஞ்சீவிரெட்டிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் கட்சிமாறி வி.வி.கிரிக்கு ஓட்டுபோட்டதால் அவர் வெற்றிபெற்று விட்டார். அதிகார பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவிரெட்டி தோல்வி அடைந்தார்.
அப்துல்கலாம் நிறுத்தப்பட்டால் மட்டுமே மாற்று கட்சியினர் அவருக்கு ஆதராவக ஓட்டுபோட வாய்ப்புள்ளது. வேறு யாரையாவது நிறுத்தினால் மாற்று கட்சி ஓட்டுகள் விழுவதற்கு வாய்ப்பு இல்லை.

Tuesday, June 12, 2012

thumbnail

ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்-வி.எஸ். சம்பத்,தலைமைத் தேர்தல் ஆணையர்


ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்
தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் ஜூலை 2-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 4-ம் தேதியாகும். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறும். போட்டி இருப்பின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 22-ம் தேதி நடைபெறும்.
 வேட்புமனு தாக்கல் செய்யும் முறை: முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை புது தில்லியில் உள்ள தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 வேட்பாளரை ஆதரித்து குறைந்தபட்சம் 50 முன்மொழிவோர், 50 வழிமொழிவோர் மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர் ரூ. 15 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
 தேர்தல் அதிகாரி நியமனம்: குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் விவேக் கே. அக்னிஹோத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அளவில் உதவி தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவர். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் பணிகளைப் பார்வையிட்டு உதவித் தேர்தல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
 வாக்களிக்கும் இடங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் புது தில்லியிலும்; மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாள்களுக்கு முன்பாக அனுமதி பெற்று மாநிலத் தலைநகரில் வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் மாநில சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sunday, June 10, 2012

thumbnail

குடும்பங்களின் வாரிசு ஆதிக்கத்தில் இந்திய அரசியல்

புது தில்லி, ஜூன் 10: இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தேசிய அரசியலில் மட்டுமின்றி மாநில அரசியலிலும் பல இடங்களில் ஒரு சில குடும்பத்தினர்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.மன்னராட்சி முறை ஒழிந்து விட்டது என்று கூறிவிட்டாலும், இந்தியாவில் பல நிலைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சிகளின் உயர் பதவிகள் என ஆட்சியிலும், கட்சியிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டதாக இவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதனை தங்கள் பேச்சாற்றலால் சமாளித்து வாரிசுகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் பதவிகளைப் பகிர்ந்தளிக்கும் சுயநலப் போக்கை மாற்றிக் கொள்வதே இல்லை. ஆட்சி, அதிகாரம் பதவி சுகம் அவர்களை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.முலாயம் குடும்பத்தில் 6-வது நபர்: இதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் குடும்பத்தில் இருந்து 6-வது நபராக தேர்தல் மூலம் பதவியைப் பெற்றுள்ளார் டிம்பிள் யாதவ்.முலாயம் சிங் மக்களவை உறுப்பினராக உள்ளார். அவரது மகன் அகிலேஷ்தான் உத்தரப் பிரதேச முதல்வர், மருமகன் தர்மேந்திர யாதவ், உறவினர் ராம்கோபால் யாதவ் ஆகியோரும் எம்.பி.க்களாக உள்ளனர். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவ் மாநில அமைச்சராக உள்ளார்.குடும்பம் ஒன்று, கட்சி வேறு: மகன், மகள், மருமகள், மனைவி உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது இந்தியாவுக்குப் புதிது அல்ல. இதற்கு நேருவின் குடும்பம் சிறந்த உதாரணம். இந்திரா காந்தியின் மருமகளான சோனியா காந்திதான், இப்போது மத்திய அரசை இயக்கும் சக்தியாக உள்ளார். மற்றொரு மருமகள் மேனகா காந்தி, காங்கிரஸின் எதிரணியான பாஜகவில் உள்ளார். இவர்களது பிள்ளைகள் ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோரும் எம்.பி.க்கள்தான்.சோனியாவின் கேள்வி: முன்னதாக 2004-ம் ஆண்டில் ராகுலுக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, "ஏன் எங்கள் கட்சிக்கு எதிராக மட்டும் குடும்ப அரசியல் என்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். மற்ற கட்சியை விட்டுவிடுகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார் சோனியா.குடும்ப அரசியலுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சமீபகால இந்திய அரசியல் சூழ்நிலை. பிகாரில் தனக்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது, தனது மனைவியை முதல்வராக்கி அரசியலுக்கு அழைத்து வந்தார் லாலு பிரசாத்.மாநிலக் கட்சிகள்: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் ஸ்டாலின், அழகிரி என குடும்பத்தினர் பலர் அரசியலில் உள்ளனர். கருணாநிதியின் மகள் கனிமொழியும் எம்.பி.தான்.பாமகவில் டாக்டர் ராமதாûஸ அடுத்து கட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளவர் அவரது மகன் அன்புமணி.ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அந்த மாநில மக்களின் செல்வாக்கை நீண்டகாலம் பெற்றிருந்த என்.டி.ராமராவின் மருமகன். கேரள முன்னாள் முதல்வர் மறைந்த கே. கருணாகரனின் மகன் முரளிதரன் தந்தை வழியில் அரசியலுக்கு வந்தவர்.முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகெüடாவின் மகன் எச்.டி.குமாரசாமிதான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர். மற்றொரு மகன் எச்.டி. ரேவண்ணாவும் அரசியலில்தான் உள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை எம்.பி.யாக்கி அழகு பார்த்தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல: குடும்ப அரசியல் குற்றசாட்டை காங்கிரஸ் மீது பாஜக கூறினாலும், அவர்களும் முழுமையாக குடும்ப அரசியலை ஒதுக்கியவர்கள் என்று கூற முடியாது. ராஜஸ்தானின் முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, குடும்ப அரசியல் வழி வந்தவர்தான். அவரது சகோதரி யசோதரா ராஜேயும் எம்.பி.தான். வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கும் எம்.பி.யாக உள்ளார்.இமாசலபிரதேச பாஜக முதல்வர் பிரேம் குமார் துமலின் மகன் அனுராக் தாகூரும் மக்களவை உறுப்பினர். கர்நாடகத்தில் சர்ச்சைக்குப் பெயர்போன பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவும் தனது மகன் ராகவேந்திராவை எம்.பி.யாக்கியுள்ளார்.காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வாரிசு, தில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வாரிசு, ஹரியாணாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வாரிசு, ஆந்திரத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் வாரிசு, மகாராஷ்டிரத்தின் பால்தாக்கரேவின் மகன், பேரன். அதே மாநிலத்தில் காங்கிரஸின் பிருதிவிராஜ் சவாண் என வாரிசு அரசியலை வழி நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை.உள்ளூர் உதாரணங்கள்: தேசிய, மாநில அளவில் என்று மட்டுமல்லாது உள்ளூர் அளவிலும் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தங்கள் வாரிசுகளை தங்களது அரசியல் வாரிசுகளாகத்தான் வளர்த்து வருகின்றனர். இதற்கு மாநில அளவில் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் போய், தங்கள் வீட்டு நலனுக்காக வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வருவதே இப்போதைய அரசியல்வாதிகளின் முதன்மைப் பணியாக உள்ளது.

Saturday, June 09, 2012

thumbnail

பிரெஞ்சு ஓபன் போட்டி: முதன் முறையாக மரியா ஷரபோவா சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா
 ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க
ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10-வது
வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஷரபோவா.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில்
ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சரா எர்ரானியைத்
தோற்கடித்தார்.
தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷரபோவா, இந்த வெற்றியின் மூலம்
மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷரபோவா 2004-ல்
விம்பிள்டனிலும், 2006-ல் அமெரிக்க ஓபனிலும், 2008-ல் அவுஸ்திரேலிய
ஓபனிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற ஷரபோவா, முதல்
முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் சரா எர்ரானி,
கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு
முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

thumbnail

புதுக்கோட்டையில் நடத்தை விதி மீறல்: இதுவரை 111 வழக்குகள் பதிவு

புதுக்கோட்டை இடைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் விதியை மீறி கட்சி கொடிகள் கட்டுதல், பிரசார அணிவகுப்பின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதல் வாகனங்களில் செல்லுதல், கட்சி கொடி,தோரணங்கள் கட்டுதல் ஆகியவற்றிற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன், இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, விஜயகாந்த், பிரேமலதா  உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க.-4, தே.மு.தி.க.-10, இந்திய ஜனநாயக கட்சி-1 என 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது வரை அ.தி.மு.க.-56, தி.மு.க. -2, தே.மு.தி.க.-32, இந்திய ஜனநாயக கட்சி-6, ச.ம.க.-2, பாரதீய ஜன சேவா கட்சி-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1, சுயேச்சை வேட்பாளர்-1, வர்த்தக கழகம்-1 உள்பட  மொத்தம் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Friday, June 08, 2012

thumbnail

சானியா-பூபதி ஜோடி சாம்பியன்:பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா-மகேஸ் பூபதி ஜோடி போலந்தின் கிளாடியா-மெக்ஸிகோவின் சான்டியாகோ ஜோடியை எதிர்கொண்டது.


நேற்று நடந்த இந்த இறுதிப்போட்டியில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போலந்து-மெக்சிக்கோ ஜோடியை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி பட்டம் வென்றுள்ளனர்.



சானியாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இதே வெற்றி தொடர தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த போட்டித்தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டிக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, இத்தாலியின் சரா எர்ரானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மோதும் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறும்.

Thursday, June 07, 2012

thumbnail

பொறியியல் படிப்புகளில் சேர ஜுலை 13ம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு-அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்துள்ளா

சென்னை, ஜுன் 7 : தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 13ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்துள்ளா.அண்ணா பல்கலையில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில், முன்னதாக ஜுலை 9ம் தேதி கலந்தாய்வு துவங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், அதே சமயத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வும் நடைபெறுவதாக அறிவிப்பட்டதால் கலந்தாய்வு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு இன்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விண்ணப்பங்களுக்கு ராண்டம் எண் 25ம் தேதி அளிக்கப்படும். மாணவர்கள் ரேங்க் பட்டியல் ஜுன் 30ம் தேதி வெளியாகும்.ஜுலை 5ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். 12ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜுலை 13ம் தேதி முதல் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.சென்னையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
thumbnail

முல்லைப் பெரியாறு அணை துளைகளை அடைப்பதில் தடங்கல்

கம்பம், ஜூன் 7: முலைப் பெரியாறு அணையில் பலத்தை சோதிப்பதற்காக போடப்பட்ட துளைகள், விரைவில் அடைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், துளைகளை அடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. துளைகளை அடைப்பதற்குத் தேவையான சிமிண்ட் மூட்டைகளை எடுத்துச் சென்ற லாரியை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒருவழியாக மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, இருக்கின்ற சிமிண்ட் மூட்டைகளை வைத்து துளைகளை அடைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில், இயற்கை தரும் இடைஞ்சலாக கேரளத்தில் மழைக்காலம் துவங்கியுள்ளது. இதனால் இந்தப் பணியில் தடங்கலும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, June 05, 2012

thumbnail

பி.இ., எம்.பி.பி.எஸ்.: விண்ணப்பிக்க இன்று கடைசி


சென்னை, ஜூன் 6: தமிழகத்தில் பி.இ.- பி.டெக். மற்றும் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க புதன்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும்.  இதுவரை 1.05 லட்சம் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.இ.- பி.டெக். படிப்புகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2.30 லட்சம் பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். பி.இ.-பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம் பொறியியல் மாணவர் சேர்க்கை குழுச் செயலருக்கு வந்து சேர புதன்கிழமை (ஜூன் மாலை 5.30 மணி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.05 லட்சம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை குழுச் செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.  எம்.பி.பி.எஸ்.- 18 ஆயிரம் விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மொத்தம் 40,317 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலருக்கு வந்து சேர புதன்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி. சுகுமார் தெரிவித்தார்.
thumbnail

வானில் ஒரு அரிய காட்சி: வெள்ளிக் கிரக இடைமறிப்பு -நாளை பார்க்கலாம்

நாளை (6-ந்தேதி) சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்கிறது. இதனால் சூரியனில் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும். இதையே வெள்ளி இடைமறிப்பு என்கிறோம்.  இதுபோன்ற நிகழ்வு 105 ஆண்டுகளுக்கு பிறகே நடைபெறும்.

இந்த நிகழ்வினை நமது பகுதியில் சூரியன் உதயம் முதல் 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வினை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது. சூரிய ஒளி வடிகட்டி மூலம் பார்த்தாலும் தெரிவது அபூர்வமே.

ஆனால் சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச்சுவரில் பிடித்தால் சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் நகர்ந்து செல்வதுபோல் தெரியும். இம்முறையை அனைவரும் பின்பற்றி பார்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் டெலஸ்கோப் இருந்தால் அதன் மூலம் ஒளியை வெண்திரையில் பிடித்து பார்த்தால் தெளிவாக இந்நிகழ்வை பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் சூரியனை பார்க்கக்கூடாது. அப்போது கண் பாதிக்கப்பட்டு விடும்.

மேலும் இந்நிகழ்வினால் பூமியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எந்த உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. மனிதனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதுகுறித்து ஜோதிடர்கள் கூறும் கருத்துக்களையும், செய்முறைகளையும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. மக்கள் அச்சமோ பீதியோ அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இந்த அரிய நிகழ்வினை பாதுகாப்பான முறையில் பார்த்து ரசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இந்நிகழ்வு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காணலாம்.

இந்நிகழ்வை நாளை பொதுமக்கள், மாணவர்கள் பார்க்கும் வகையாக ஆரப்பாளையம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் டெல்ஸ்கோப் மூலம் காலை 8 மணி முதல் 9 மணி வரை பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை வானொலி இந்நிகழ்வினை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்ப உள்ளது. மாவட்டத்தின் பல பள்ளிகளில் இந்நிகழ்வினை அறிவியல் இயக்கம் ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு நடத்திக்காட்ட உள்ளனர். இதன் மூலம் சுமார் 50 பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்நிகழ்வினை செய்முறை மூலம் செய்து காட்டுவர்.

இதற்கென எளிய செய்முறை கருவியினை அறிவியல் இயக்க ஆசிரியர் ஞானசேகரன் வடிவமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார். முனைவர் பேராசிரியர் குமாரசாமி வெள்ளி இடைநகர்வு குறித்த அறிவியல் பின்னணி குறித்து கணினி மூலம் விளக்க உரை ஆற்ற உள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறு விளக்க பிரசுரமும், விளக்க புத்தக்கமும் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு உள்ளன. மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கு.கடசாரி தெரிவித்தார்.

சூரியன் முன்னே வெள்ளியின் உலா மேலும் இதுதொடர்பாக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் குமாரசாமி கூறியதாவது:-

வெள்ளி கிரகமானது சுக்கிரன், விடிவெள்ளி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பூமியின் அளவில் சற்றே சிறியதாக அமைந்திருந்தாலும் அதன் காற்று மண்டலம் நம் காற்று மண்டலத்தைவிட 93 மடங்கு அடர்த்தியானது.

அதில் 95.5 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு வாயுவாக உள்ளதால் அங்கு சராசரி வெப்பநிலை 460 டிகிரி செல்சியசிற்கும் மேலாக உள்ளது. இந்த வெப்பநிலை சூரியனுக்கு அருகில் அமைந்துள்ள புதன் கிரகத்தைவிட 60 டிகிரி செல்சியஸ் அதிகமானது.

வெள்ளி கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 243 நாட்களாகிறது. ஆனால் அது சூரியனை சுற்றிவர 225 நாட்களே எடுத்துக்கொள்கிறது. வெள்ளி கிரகத்தின் ஒருநாள் அதன் ஒரு வருடத்தைவிட பெரியது.

பூமியில் 2 வருடங்கள் ஆகும்போது வெள்ளியில் 3 நாட்கள்தான் ஆகியிருக்கும். வெள்ளியின் அச்சு 177 டிகிரி சாய்வாக உள்ளதால் அது தலைகீழாக சுற்றுகிறது. இதனால் அங்கு சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

வெள்ளி கிரகத்தில் அமைந்துள்ள ஒரு கண்டத்தின் ஒரு பகுதிக்கு ‘லஷ்மி சமவெளி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெள்ளி சூரியன் முன்னே கடந்த செல்லும் நிகழ்ச்சி வீனஸ் டிரான்சிட் வெள்ளி இடைநகர்வு நாளை (6-ந்தேதி) காலையில் நடைபெற போகிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும்.

மீண்டும் இதே நிகழ்ச்சி சுமார் 105 வருடங்களுக்கு பின் 2117-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி தான் நடைபெறும். 2117-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறப்போகும் அந்த நிகழ்வை இன்று பிறந்தவர்களோ, உயிரோடு இருப்பவர்களோ இனி காண வாய்ப்பில்லை.

விண்ணில் நடைபெறும் இந்த அரிதான நிகழ்வினால் பூமிக்கோ, சூரியனுக்கோ, மற்ற கிரகங்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. எல்லோரும் இந்த நிகழ்வை தகுந்த பாதுகாப்புடன் கண்டு மகிழலாம்.

சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகமானது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நாளை (6-6-12) வருகிறது. அப்போது பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளி கிரகமானது தன்னைவிட 100 மடங்கிற்கும் சற்று அதிகமான விட்டத்தையுடைய சூரியனை கடந்து செல்வதை ஒரு கருப்பு புள்ளி சூரியனை கடந்து செல்வது போல காணலாம். இதனையே வெள்ளி இடைநகர்வு, வெள்ளி கடத்தல், வெள்ளி நகர்வு, வெள்ளி உலா, வெள்ளி இடைக்கடத்தல், வெள்ளி மறைப்பு என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு வெள்ளி கிரகம் சூரியன் முன் கடந்து செல்ல சுமார் 7 மணி நேரம் ஆகும். வெறும் கண்ணால் இதனை பார்ப்பது கடினம். ஏனெனில் வெள்ளியானது. சூரியனின் அளவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளதால் வெள்ளி மிகச்சிறிய புள்ளியாகத்தான் தெரியும். தொலைநோக்கியின் உதவியுடன்தான் பார்க்க முடியும்.

About