புதுக்கோட்டை இடைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் விதியை மீறி கட்சி கொடிகள் கட்டுதல், பிரசார அணிவகுப்பின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதல் வாகனங்களில் செல்லுதல், கட்சி கொடி,தோரணங்கள் கட்டுதல் ஆகியவற்றிற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன், இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க.-4, தே.மு.தி.க.-10, இந்திய ஜனநாயக கட்சி-1 என 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது வரை அ.தி.மு.க.-56, தி.மு.க. -2, தே.மு.தி.க.-32, இந்திய ஜனநாயக கட்சி-6, ச.ம.க.-2, பாரதீய ஜன சேவா கட்சி-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1, சுயேச்சை வேட்பாளர்-1, வர்த்தக கழகம்-1 உள்பட மொத்தம் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

02:56
Tags :
latest tamilnadu news
,
pudukottai by-election
,
result for by-election
,
tamilnadu election commission
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments