Monday, June 04, 2012

thumbnail

தமிழகத்திற்கு ரூ.28,000 கோடி நிதி ஒதுக்கீடு



புதுடெல்லி: தமிழகத்திற்கு ரூ.28,000 கோடி நிதியை, மத்திய அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது. 2012-13ம் நிதியாண்டிற்காக ரூ.28,000 கோடியை, தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் தமிழகத்திற்கு ரூ.28,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தின் திட்ட பணிக்காக ரூ.23,535 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட, இந்த ஆண்டு ரூ.4,465 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About