சென்னை, ஜுன் 7 : தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 13ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்துள்ளா.அண்ணா பல்கலையில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில், முன்னதாக ஜுலை 9ம் தேதி கலந்தாய்வு துவங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், அதே சமயத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வும் நடைபெறுவதாக அறிவிப்பட்டதால் கலந்தாய்வு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு இன்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விண்ணப்பங்களுக்கு ராண்டம் எண் 25ம் தேதி அளிக்கப்படும். மாணவர்கள் ரேங்க் பட்டியல் ஜுன் 30ம் தேதி வெளியாகும்.ஜுலை 5ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். 12ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜுலை 13ம் தேதி முதல் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.சென்னையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
09:28
Tags :
after+2
,
enginerring admission
,
Entrance exam
,
latest tamilnadu news
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments