பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 44-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 30-ம் தேதி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மத்திய தொழிலாளர் நல ஆணையர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையொட்டி மத்திய தொழிலாளர் நல ஆணையம் மற்றும் என்.எல்.சி நிர்வாகம் இடையே சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இன்கோசெர்வில் காத்திருப்போரை பணி நிரந்தரம் செய்யவும், ஒப்பந்த தொழிலாளர்களை பதிவு மூப்பு அடிப்படையில் இன்கோசெர்வில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. தொழிலாளர்களுக்கு வாடகைப்படியாக ரூ.50 மற்றும் சலவைப்படியாக ரூ.25 தரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.மேலும் தொழில் கூட்டுறவு சங்கத்தில் புதிதாக 4250 பேரை சேர்க்கவும் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக சேர்க்கப்படும் 4250 பேர் எவ்வளவு காலத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனபது குறித்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
07:43
Tags :
nlc
,
nlc labour strike
,
tami
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments