தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. அவை தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். அந்த இடங்கள் தவிர அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 292 இடங்கள் சென்றுவிடும். மொத்தம் 1945 இடங்கள் ஆகும்.
சிவகங்கையில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இடங்கள் 50 மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு மேலும் 50 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.அதாவது 100 இடங்களாக அதிகரித்துள்ளது.
அதுபோல வேலூரில் உள்ள சி.எம்.சி.மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் 60-ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரியில் 100 இடங்கள் 150 இடங்களாக அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.
18:37
Tags :
chengalpattu medical college
,
latest news tamilnadu .tamilan
,
mbbs admission
,
medical seat increase
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email


No Comments