Showing posts with label latest news tamilnadu .tamilan. Show all posts

Friday, October 05, 2012

thumbnail

ஒரிசாவில் இன்று நடந்த தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பாதுகாப்புக்காக பல ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பிருத்வி-2 ரக ஏவுகணை சோதனை  வெற்றிகரமாக நடந்தது. அடுத்த கட்டமாக இன்று ஒரிசா கடற்கரை பகுதியில் தனுஷ் அணு ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. இந்த ஏவுகணை 8.53 மீட்டர் நீளமும், 0.9 மீட்டர் விட்டமும் கொண்டது. இது கப்பல் படை பயன்பாட்டிற்கும் தலையில் உள்ள இல
thumbnail

தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்களுக்கு கொடுத்தார் ஜெ.,

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த சில நாட்களில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெ., உத்தரவு பிறப்பித்தார். இவரது அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் வரவேற்பும் மகிழச்சியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் உயர்த்தி வழங்கியது. இதனையடுத்து மாநில அரசுகளும் தங்களின் அறிவிப்பை வெளியிடும். அரசு ஊழியர்களுக்கு சலுகை செய்யும் அரசு என்று பெயர் பெற்ற தி.மு.க., அரசு , மத்திய அரசு அறிவித்த 24 மணி நேரத்தில் அறிவித்து விடும். அ.தி.மு.க,. அரசு அறிவிக்குமா, தருமா? தராதா என்ற அச்சத்திலேயே அரசு ஊழியர்கள் இருப்பர். வழக்கம் போல் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

Thursday, October 04, 2012

thumbnail

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை வசதி கட்டாயம்

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த ஆறு மாதத்துக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. கழிப்பறை இல்லாத பள்ளிக் கூடங்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குவதாகவும் உச்சநீதிமன்றம் அந்த வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தது.
இந் நிலையில் பள்ளிக் கூட வசதிகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் அடுத்த ஆறுமாதங்களுக்குள் அமல் படுத்தப் பட வேண்டும் என்று கே. எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கூடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்ற ஷரத்துக்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
thumbnail

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து - ஒருவர் பலி

சென்னையில் கலங்கரை விளக்கம் அருகே அரசு நகரப்பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால் ஒருவர் பலியானார் சிலர் காயம் அடைந்தனர்.

சென்னை பெசன்ட் நகரில் இருந்து திருவொற்றியூர் சுங்க சாவடிக்கு, 6-ஏ வழித்தட அரசு பஸ் புறப்பட்டு வந்தது. மதியம் 12 மணி அளவில் அந்த பஸ் மெரீனா கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. கலங்கரைவிளக்கம் எதிரே அகில இந்திய வானொலி நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டினார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியபடி ஓடிய பஸ், ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. பஸ் மாறுமாறாக வருவதை கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டு கத்தினர். பஸ் நின்றதும் டிரைவரும், கண்டக்டரும் இறங்கி ஓடிவிட்டனர். பஸ் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடந்தனர். ஒருவர் மட்டும் பஸ்சுக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி பிணமாக கிடந்தார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த பெண் உள்பட 4 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர்.

Wednesday, October 03, 2012

thumbnail

கண்ணாமூச்சு காட்டும் காற்றாலை: ஏறி இறங்கும் மின்சார தடை

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி முழுமையாக சீரடையாததால் தினமும் மின்வெட்டு உள்ளது. சென்னையில் 1 மணி நேரமும் பிற மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாகும் போது மின்வெட்டு குறைக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு வந்ததால் சென்னையில் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு இல்லை. மற்ற மாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

ஆனால் இன்று மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டது. காலையில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தான் கிடைத்தது. இதனால் இன்று சென்னையில் மீண்டும் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்ததால் கடந்த மாதம் மின்வெட்டு அதிகமாக இருந்தது. காற்றாலை மூலம் அதிகபட்சம் 1180 மெகாவாட் மின்சாரம்தான் கிடைத்தது. இதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. பரவலாக மழை பெய்த காரணத்தாலும், காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி தொழிற் சாலைகளில் மின்சார பயன்பாடு குறைந்ததாலும் தாராளமாக மின்சாரம் கிடைத்தது. இதனால் 2 நாட்களாக மின்வெட்டு செய்யப்படவில்லை. இன்று காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் குறைந்து விட்டது. இதனால் பழையபடி மின் வெட்டு தொடருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்க வெளி மாநிலங்களில் இருந்து 3500 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு (2013) மே மாதம் வரை யூனிட் மின்சாரம் ரூ. 4.13ல் இருந்து 5 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என்று ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Saturday, September 22, 2012

thumbnail

V.A.O எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது


கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.1,870 வி.ஏ.ஓ. பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483 தேர்வுக் கூடங்களில் நடைபெறவுள்ளது.



இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களான www.tnpsc.gov.in, wwwtnpscexams.net ஆகியவற்றில் அவரவர்க்கான விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 1800 - 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது conducttnpscgmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார்.

Tuesday, September 11, 2012

thumbnail

என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்கள் கல்விக்கடனால் பெருமளவு பயன்-கடனை 10 ஆண்டுகளிலோ அல்லது 15 ஆண்டுகளிலோ கடனை திருப்பிச்செலுத்தினால் போதும்

ஏழ்மை படிப்புக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் மத்திய அரசு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு அடிஎடுத்து வைக்கும் ஏழை மாணவ&மாணவிகளுக்கு கல்விக்கடன் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக, என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்கள் கல்விக்கடனால் பெருமளவு பயன் அடைந்து வருகிறார்கள்.
 
கல்விக்கடனின் சிறப்பு என்னவென்றால் மற்ற வங்கிக்கடன்களைக் காட்டிலும் கல்விக்கடனுக்கு வட்டி மிகவும் குறைவு. படித்துக்கொண்டிருக்கும்போது வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். கடன்தொகையை படித்து முடித்து பின்னர் கட்டினால் போதும். உள்நாட்டில் படிக்கவும், வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கவும் கல்விக்கடன் பெறலாம்.
 
தற்போது அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்த நிலையில், அரசு ஒதுக்கீடோ, நிர்வாக ஒதுக்கீடோ எந்த பிரிவின் கீழ் சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டுவிடக்கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உத்தரவு பிறப்பித்தார்.
 
இதன் எதிரொலியாக, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும் வகையில் தற்போதைய கடன் நடைமுறைகளை திருத்தி அமைத்து வருகிறது.
 
மேலும், புதிய முறையின்கீழ், தற்போதைய வங்கிக்கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, உள்நாட்டில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும் கடன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு 3-வது நபர் ஜாமீனோ, உத்தரவாதமோ வங்கிக்கடன் கேட்கக்கூடாது. அதோடு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களாக இருந்தால் ரூ.7.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்தொகைக்கும் ஜாமீன் உத்தரவாதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
 
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்தால் ரூ.45 ஆயிரத்து 787 கோடி அளவுக்கு கல்விக்கடன் நிலுவையில் இருந்து வருகிறது. 23 லட்சம் பேரிடமிருந்து இந்த நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு தொடங்க உத்தேசித்துள்ள கடன் உத்தரவாத நிதி கல்வி அறக்கட்டளை மூலம் வங்கிகளுக்கு நிலுவைத்தொகை சுமை குறையும். காரணம், கல்விக்கடன் நிலுவை ஏற்பட்டால் அதில் 75 சதவீத தொகையை இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட வங்கிக்கு வழங்கிவிடும்.
 
நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டத்தோடு கல்விக்கடனை திருப்பிச்செலுத்தும் காலத்தையும் நீட்டிக்குமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
 
தற்போது கல்விக்கடன் பெற்று படித்து முடித்து வேலையில் சேரும் பட்டதாரிகள் 7 ஆண்டுகளில் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும். ஆனால், புதியமுறையின்படி, கடன்தொகைக்கு ஏற்ப 10 ஆண்டுகளிலோ அல்லது 15 ஆண்டுகளிலோ கடனை திருப்பிச்செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. 

Saturday, September 01, 2012

thumbnail

பல ஊர்களில் சொத்து குவித்தது அம்பலம் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த டாமின் அதிகாரிகள் 3 பேர் கைது

மேலூர்: கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த  டாமின் அதிகாரிகள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். முறைகேட்டிற்கு மூல காரணமாக இருந்த மேலும் சில அதிகாரிகள் சிக்குவர் என்று தெரிகிறது. கைதான மூன்று பேரும் பல்வேறு ஊர்களில் சொத்துக்களை வாங்கி குவித்த  திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த கனிம வளத்துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் 48 பேர் மீது நடவ டிக்கை எடுக்க  வேண்டுமென கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து பிஆர்பி நிறுவனத்தில் பணியாற்றிய கனிம வளத்துறை முன்னாள் ஊழியர் சண்முகவேல், கீழையூர் டாமின் அலுவலகத்தில் கணக்காளராக வேலைபார்த்த சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலூரில் செயல்படும் கனிம வளத்துறை அதிகாரிகள் 3 பேர் கிரானைட் குவாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டு முறைகேட்டிற்கு உதவியது தெரிந்தது. கனிம வளத்துறை முதுநிலை திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர், சுரங்க பணி துணை அலுவலர்  ரகுபதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை மதுரை எஸ்பி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, முறைகேட்டுக்கு எப்படியெல்லாம் உதவினர் என்பதை அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை,  டாமின் ஊழியர்கள் 4 பேர் இந்த விவகாரத்தில்  கைது செய்யப்பட் டுள்ளனர். உயர் அதிகாரிகள் பலர் இந்த முறைகேட்டுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளனர்.
thumbnail

மீன்பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணம்: கேரள அரசின் அறிவிப்பால் குமரி மீனவர்கள் அதிர்ச்சி

மீன்பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணம்: கேரள அரசின் அறிவிப்பால் குமரி மீனவர்கள் அதிர்ச்சி
குமரி மீனவர்கள் ஏராளமானோர் கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கேரளாவில் மீன்பிடிக்க கேரள மீன் வளத்துறை மற்றும் துறைமுகத்திற்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.15 ஆயிரம் என்ற அடிப்படையில் வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வரும் குமரி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்கம், தமிழக,புதுவை மாவட்ட மீனவ மக்கள் கூட்டமைப்பு, ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

கூட்டத்தில் அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

குமரி மாவட்ட மீனவர்கள் காலம் காலமாக கேரள பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் கேரள பகுதியில் மீன் பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் உபயோக கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கடந்த 9-ந் தேதி அறிவித்துள்ளனர். இது மீனவர்களின் உரிமையை பறிப்பதாகும். வரும் காலங்களில் மற்ற மாநில கடல் எல்லையில் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலையை உருவாக்கும். இதுதவிர கேரள மீனவர்கள் ரூ.750 மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாரபட்சமான நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்க கூடியது ஆகும். எனவே தமிழக அரசு மீன்வளத்துறை மூலமாக கேரள அரசு மீன்வளத்துறையிடம் பேசி பாரபட்சமற்ற முறையில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
thumbnail

நிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்


நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரதீய ஜனதா தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. அத்துடன் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதுபற்றி பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:-

சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த இடத்திலும் எந்த தவறும் நடக்கவில்லை.  கணக்கு தணிக்கை அதிகாரி, யூகங்களின் அடிப்படையில்தான் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு என்று கூறியிருக்கிறார். இது தவறான கணிப்பாகும்.

சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
thumbnail

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : மரியா சரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா சரபோவா அமெரிக்காவின் பர்டெட்டுடன் மோதினார். 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மரியா சரபோவா, பர்டெட்டியை 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
thumbnail

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்

சென்னை, ஆக. 31: சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு முதல் கட்டமாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான (2012-13) இந்தக் கட்டண விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.இந்தப் பள்ளிகளுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை ஆண்டு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் உள்ள "செவராய்ஸ் வேலி' பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரமும், கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு அதிகபட்சமாக ரூ.31,875-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கு விழுப்புரம் மாவட்டம், புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.7 ஆயிரமும், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி சீனியர் செகண்டரி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ.36 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாதம் ரூ.50 கட்டணம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் உள்ள நியூ கிரியேஷன் பைலிங்குவல் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று குழு உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் சென்னையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இயங்கி வருகிறது.இந்தக் குழு முன்னிலையில் விவரங்களை சமர்ப்பிக்காததால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்தது.இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய சட்டம் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதில் சென்னையில் அதிக அளவாக 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள பள்ளிகளுக்கு...: மீதமுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த 384 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியில் நீதிபதி சிங்காரவேலு குழு ஈடுபட்டு வருகிறது.இந்தப் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
thumbnail

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் சிங்கள கடற்படையால் சிறை பிடிப்பு

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குவது சிறைபிடிப்பது வலைகளை அறுத்து மீன்களை கொள்ளையடிப்பது போன்ற அத்துமீறிய செயல்களை இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்கள் பிரதமரை வற்புறுத்தி வருகின்றனர் என்றாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மறுநாளும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் இன்று கச்சத்தீவு அருகே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். இதில் 28 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
thumbnail

அசாம் எண்ணெய்க் கிணற்றில் திடீர் தீ: தீவிரவாதிகள் கைவரிசையா?

அசாம் எண்ணெய்க் கிணற்றில் திடீர் தீ: தீவிரவாதிகள் கைவரிசையா?
அசாம் மாநிலம் தீன்சுகியா மாவட்டம் சந்த்மரி கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாகப் போராடி அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர். இதையடுத்து எண்ணெய்க் கிணறு மூடப்பட்டது.
 
எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரணையில், எண்ணெய்யை திருட முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 
 
உயர் அழுத்தம் கொண்ட எண்ணெய்க் கிணற்றின் வால்வில் திருடர்கள் துளை போட்டுள்ளனர். அப்போது திரவ ஹைட்ரோ கார்பன் வெளியேறி, திடீரென தீப்பற்றியதாக எண்ணெய் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிஷ்னு சர்மா தெரிவித்தார்.
 
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், அப்பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
 
இச்சம்பவத்திற்கு உல்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

Friday, August 31, 2012

thumbnail

சொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றம்

பெங்களூரு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதால், வழக்கு விசாரணை தற்காலிகமாக, சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, புதிய நீதிபதியை நியமிக்க, அரசு ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், "இந்த வழக்கை, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும், சி.பி.ஐ., கோர்ட், தற்காலிகமாக விசாரிக்க வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி சோமராஜு, 58, ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கவுள்ளார். இந்த வழக்கு, செப்டம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
thumbnail

செல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும்

புதுடில்லி: செல்போன் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் செல்போன் ஹேண்ட் செட்டுகள் குறித்து புதுவிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய தொலை தொடர்‌புத்துறை அமைச்சர் ‌தெரிவித்தார். செல் போன் கோபுரங்களால் அதிகளவு கதிர்வீச்சுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் புதிய விதிகள் குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் வருமாறு:
‌செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும். இரு செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 35 மீ தொலைவில் இருக்க வேண்டும்.

மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அ‌ட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
thumbnail

கல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன்

காஞ்சீபுரம் மாவட்டம், குன்னத்தில் 'ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி' என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு மைதானத்திடல் கட்டும் போது, கட்டுமானம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.  

இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரியின் நிர்வாகி ஜேப்பியாரை (வயது 73) கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆக.30-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
thumbnail

மழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடிக்கப்படுகிறது- பஸ் போக்குவரத்து மாற்றம்

சென்னை நகரின் முக்கிய பகுதியான அண்ணாநகருக்கு பூந்தமல்லி  சாலையில் இருந்து செல்லும் நுழைவு வாயிலில் அண்ணா நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு வளைவு முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வைர விழா பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்டது.

இதை மறைந்த எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1986-ம் ஆண்டு திறந்து வைத்தார். 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த வளைவை  ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். சிறப்பு வாய்ந்த அண்ணா நினைவு வளைவு நாளை (சனிக்கிழமை) அங்கிருந்து அகற்றப்படுகிறது. பூந்தமல்லி சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, அண்ணாநகர் ரோடு ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவானதால் அந்த பகுதியில் 3 சாலைகளிலும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. ரூ.117 கோடி செலவில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்ட ஒதுக்கியுள்ளது.

மேம்பாலம் கட்டுவதற்கு அண்ணா நூற்றாண்டு வளைவு இடைïறாக இருப்ப தாக கருதியதால் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. அங்குள்ள வளைவுகளை கிரேன் மூலம் தூக்கி எடுக்கவும் மற்ற பகுதிகளை இடித்து சமப்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து அந்த பணிகளை தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நினைவு தூண் இடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பணி தொடர முடியவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாதமானது. தற்போது நிலைமை சீரானதால் நூற்றாண்டு வளைவை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இந்த பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசாரின் அனுமதியையும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  பெற்று தயாராக இருக்கிறார்கள். எனவே நாளை இரவு இந்த பணி தொடங்கப்படுகிறது. அகற்றப்படும் 2 வளைவுகளும் அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே கூவம் ஆற்றோரம் நிறுவப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வளைவு அகற்றப்பட்டு தூண்கள் இடிக்கப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.   
thumbnail

20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என்ஜினீயர்கள் சாதனை

சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனி அது பற்றி கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி அமெரிக்க ‘ஏரோ நாட்டிக்கல்’ என்ஜினீயர்கள் வடிவமைத்துள்ளனர்.

ரோடுகளில் 4 சக்கரங்களில் செல்லும்  இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானம் ஆக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.

2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம். பின்னர் இதை தரை இறக்கும் போது மீண்டும் கார் ஆக மாற்றி வீட்டின் போர்டிகோவில் பார்க்கிங் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 30, 2012

thumbnail

குஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்- 9 வீரர்கள் பலி

ஜாம்நகர்: குஜராத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டு, சிதறி உடைந்து விழுந்ததில் 9 பேர் வீரர்கள் பலியாகிவிட்டனர்.
விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தளத்தில் இருந்து இன்று பயிற்சிக்காகப் புறப்பட்டன.
பகல் 12.25 மணியளவில் ஜாம்நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சர்மத் கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.
பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கையும் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் பின் பகுதியும் மோதிக் கொண்டன. இதில் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து விழுந்தது. தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரும் பலமுறை குட்டிக்கர்ணம் அடித்தபடி தரையில் விழுந்து நொறுங்கியது.
அதே போல பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கை உடைந்து சிதறியதோடு, அந்த ஹெலிகாப்டரும் படுவேகத்தில் தரையில் விழுந்து சிதறியது.
இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 9 வீரர்களும் பலியாகிவிட்டனர். மேலும் தரையில் இருந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளன.
இந்த முழு மோதல் சம்பவத்தையும் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை டிவி 7 குஜராத்தி சேனல் ஒளிபரப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத குரு அஸாராம் பாபு உள்ளிட்ட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர் கோத்ராவில் தரையிறங்குகையில் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் நடந்த மறுநாளே விமானப்படை ஹெலிகாப்டர்கள் மோதிவிபத்துக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.

About