Home
/
Posts Filed Under
vao
கிராம நிர்வாக
அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி
நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
அறிவித்துள்ளது.1,870 வி.ஏ.ஓ. பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு
செப்டம்பர் 30-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தமிழகம்
முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483 தேர்வுக் கூடங்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கான
நுழைவுச் சீட்டுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களான www.tnpsc.gov.in,
wwwtnpscexams.net ஆகியவற்றில் அவரவர்க்கான விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் ஏதாவது சந்தேகம்
ஏற்பட்டால் 1800 - 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது
conducttnpscgmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 9: தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870 இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசித் தேதி: எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம். பாடத் திட்டம்: பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். விவரங்களுக்கு...: விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில் தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.