Showing posts with label Chief Minister J Jayalalithaa. Show all posts

Wednesday, April 10, 2013

thumbnail

தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன: ஜெயலலிதா அறிவிப்பு

தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள், மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார்.

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:
...
திடக் கழிவிலிருந்து மின்சாரம்...
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் 40 முதல் 60 விழுக்காடு திடக்கழிவுகள் மக்கும் தன்மை உடையதாக உள்ளன. அதிக அளவில் திடக் கழிவுகள் உற்பத்தியாகும் காய்கறி அங்காடிகள், உணவகங்கள், திருமணக் கூடங்கள், இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுகளை தினசரி சேகரித்து அவற்றிலிருந்து உருவாகும் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யலாம்.

5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும். எனவே, திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 200 சதுர மீட்டர் பசுமை பகுதி உள்ளிட்ட 625 சதுர மீட்டர் பரப்பரளவில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாநகராட்சிகளிலும்,

கும்பகோணம், பள்ளிப்பாளையம், ஓசூர், பூந்தமல்லி, காயல்பட்டினம், மேட்டூர், திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், கடலூர், பல்லவபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், உதகமண்டலம், ராஜபாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், நாகர்கோவில் மற்றும் பழனி ஆகிய 24 நகராட்சிகளிலும் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும்;

காரைக்குடி, சிவகாசி சிறப்பு நிலை நகராட்சிகளாக உயர்வு...

காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்றார் ஜெயலலிதா.

Saturday, October 06, 2012

thumbnail

புதிய அமைச்சர் ப.மோகன் பதவியேற்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார். இதன்படி புதிதாக அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட ப.மோகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில், ஆளுநர் கே.ரோசய்யா ஊரக தொழில்துறை அமைச்சராகப் பதவி யேற்ற ப.மோகனுக்கு பதவிப் பிரமானமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Saturday, September 22, 2012

thumbnail

அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு,விலையில்லா மடிக்கணினி

அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை 2012-13 கல்வியாண்டு முதல் வருமான உச்சவரம்பு மற்றும் இன வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக 500 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுவரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 140 ரூபாயும், ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 150 ரூபாயும் பழங்குடியின மற்றும் பர்மா, இலங்கை, வியட்நாம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு 175 ரூபாயும் பெற்றோரின் ஆண்டு உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 100 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்காக கூடுதலாக 12 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 3 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 3 ஆயிரத்து 476 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 31, 2012

thumbnail

சொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றம்

பெங்களூரு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதால், வழக்கு விசாரணை தற்காலிகமாக, சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, புதிய நீதிபதியை நியமிக்க, அரசு ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், "இந்த வழக்கை, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும், சி.பி.ஐ., கோர்ட், தற்காலிகமாக விசாரிக்க வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி சோமராஜு, 58, ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கவுள்ளார். இந்த வழக்கு, செப்டம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Thursday, July 05, 2012

thumbnail

Jaya asks Centre to block SLAF(Sri Lankan Air Force personnel) training-இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த முதல்வர் ஜெ., கண்டனம் !


சென்னை: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக .நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.., .தி.மு.., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About