Sunday, June 03, 2012

thumbnail

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 48 குழுக்களுடன் ஆட்சியர் ஆலோசனை

ஜூன் 3, 2012

புதுக்கோட்டை: ஜுன் 12-ந் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலையொட்டி அத்துமீறும் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போட தேர்தல் ஆணையமும் 48 குழுக்களும் தயராக உள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, கண்காணிப்பு நிலைக்குழு உள்ளிட்ட 48 குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கலைஅரசி தலைமையில் தேர்தல் பார்வையாளர் ஹேம்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

- தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அனைத்து குழுவினரும் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

- அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-. பிரச்சாரத்திற்கு மூன்று வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

- ஊர்வலத்திற்கு மூன்று மூன்று மூன்று வாகனங்களாக பத்து வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு மூன்று வாகனத்திற்கும் இடையே 300 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

- பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்களின் வாகனங்களில் கட்சி கொடிகளைக் கட்ட அனுமதி உண்டு. அவர் இல்லாத போது அந்த வாகனத்தில் கட்சி கொடிகளை பயன்படுத்த கூடாது.

- அனுமதியின்றி கொடிகள், தோரணங்கள் கட்டியிருந்தால் அதனை உடனே அகற்ற வேண்டும்.

- கட்சிப்பாகுபாடின்றி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அமுல்படுத்த குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About