Sunday, June 03, 2012

thumbnail

பத்தாம் வகுப்பு (SSLC)பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை ( நாளை) வெளியாக உள்ளது

சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை ( நாளை) வெளியாக உள்ளது. இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளை 11 லட்சம் மாணவ மாணவியர் எழுதியுள்ளனர்..

இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி பிற்பகல் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநகரத்தின் இணையதளங்களில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tn.nic.in/tnhome/hscresult.html

http://www.tn.gov.in/dge/default.htm

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை லும் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை தேசிய தகவல் மையத்தை நாடியுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட தேசிய தகவல் மைய அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்கள் அரசு மற்றும் தனியார் இணையதளங்களின் மூலம் வழக்கம் போல் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியும். பள்ளி அளவிலான தகவல் அறிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் தனி எண் வழங்கப்படும். இதன் மூலமாக ஒவ்வொரு பள்ளியின் விபரங்களை அந்தந்த பள்ளிகள் அறிந்து கொள்ள முடியும்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் அவரவர் மாவட்டம் முழுவதுமான முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்ட தேசிய தகவல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் தேர்வு முடிவு வெளியிட்ட சில நிமிடங்களில் எங்களுக்கு தகவல்கள் கிடைக்கும். தேசிய தகவல் மையத்தின் மூலமாக தேர்வு முடிவுகள் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்படும் என்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About