Showing posts with label 10th results. Show all posts

Monday, June 18, 2012

thumbnail

10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்கள்.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள். 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா-க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவி டி. கார்த்திகா, மாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள். 



மேலும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பி. ஸ்ரீநாத்-க்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகள் இ.எம். நந்தினி, கே.என். மகாலஷ்மி, ஸ்வாதி சென்னியப்பன், என். அகிலா, மாணவர்கள் எஸ். ஜென்கின்ஸ் காட்பிரே, டி. கவின், ஆகிய ஆறு 2 மாணவ, மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள் எஸ். ஸ்மிதா, கே. சூர்யா, ஆர். தாரணி, டி. வினுமிதா, கே. ஷர்மிளா, பி.கே. பூஜாஸ்ரீ, பி. அம்ரிதா, ராஜேஸ்வரி, மாணவர்கள் எஸ்.கே. அபிஷேக், எம். ஸ்ரீதரா, ஐ. ஜஸ்டின் சேவியர் ஆகிய பதினொரு மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 18 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டியதுடன், பரிசுப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
thumbnail

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. உடனடித் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வருக்கு, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். அனைத்து தனித் தேர்வர்களுக்கும், 20, 21 தேதிகளில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும். ஏப்ரலில் நடந்த தேர்வை எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவியர், படித்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்'டுகளை பெறலாம். ஏற்கனவே, தனித்தேர்வராக எழுதியவர்களுக்கு, கல்வி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மையத்தில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்.மெட்ரிக் தனித் தேர்வர், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களை எழுதினால், தலா, 100 ரூபாய் வீதம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆங்கிலோ இந்தியன் மாணவராக இருந்தால், கூடுதலாக, தலா, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

Sunday, June 03, 2012

thumbnail

பத்தாம் வகுப்பு (SSLC)பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை ( நாளை) வெளியாக உள்ளது

சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை ( நாளை) வெளியாக உள்ளது. இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளை 11 லட்சம் மாணவ மாணவியர் எழுதியுள்ளனர்..

இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி பிற்பகல் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநகரத்தின் இணையதளங்களில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tn.nic.in/tnhome/hscresult.html

http://www.tn.gov.in/dge/default.htm

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை லும் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை தேசிய தகவல் மையத்தை நாடியுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட தேசிய தகவல் மைய அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்கள் அரசு மற்றும் தனியார் இணையதளங்களின் மூலம் வழக்கம் போல் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியும். பள்ளி அளவிலான தகவல் அறிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் தனி எண் வழங்கப்படும். இதன் மூலமாக ஒவ்வொரு பள்ளியின் விபரங்களை அந்தந்த பள்ளிகள் அறிந்து கொள்ள முடியும்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் அவரவர் மாவட்டம் முழுவதுமான முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்ட தேசிய தகவல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் தேர்வு முடிவு வெளியிட்ட சில நிமிடங்களில் எங்களுக்கு தகவல்கள் கிடைக்கும். தேசிய தகவல் மையத்தின் மூலமாக தேர்வு முடிவுகள் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்படும் என்றனர்.

About