Saturday, June 09, 2012

thumbnail

அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் செல்போன் பேச தடை: பொதுமக்கள் புகார் கொடுத்ததால் கேரள அரசு அதிரடி


கேரளாவில் அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசக்கூடாது என்று கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களை அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பொதுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறைத் தலைவர்களின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர காலங்களில் மட்டும் செல்போனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. செல்போனில் பேசாமல் இருக்கும்போது எதன்மூலம்? எப்படி? அவசர காலம் என்ற முடிவுக்கு நாங்கள் வர முடியும் என்று கேரள அரசு தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் தரைவழி தொலைபேசி தவறாகப் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் சரியானதுதான். ஆனால், இது முற்றிலும் நடைமுறை சாத்தியமில்லாதது என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பான்பராக், குட்கா, சூப்பர், ஷயனிஹயனி, மாவா போன்ற போதைப் பொருட்களுக்கு கேரள அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.   

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About