Saturday, June 02, 2012

thumbnail

தலைவர் கருணாநிதி மீது அன்பு கொண்டோர் பிறந்தநாள் வாழ்த்தினை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்

இன்று காலை 10 மணி அளவில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கழக மாணவர் அணி சார்பில் மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி முன்னிலையில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இணைய தளம் மூலமாக முதல் வாழ்த்தினை பதிவு செய்து இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர் அணி துணை செயலாளர்கள் பூவை ஜெரால்டு, குத்தாலம் அன்பழகன் மற்றும் மாணவர் அணி தோழர்கள் உடன் இருந்தனர். உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களே வணங்குகிறேன்! வாழ்த்துக்கள்!! என முதல் பதிவினை செய்தார். உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், கழக தோழர்கள் மற்றும் தலைவர் கருணாநிதி மீது அன்பு கொண்டோர் வாழ்த்தினை www.wishthalaivar.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையொட்டி மத்திய மந்திரி ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About