அரசுத் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கான (குரூப் 4) தேர்வு ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 10,793 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு சுமார் 12,50,000 விண்ணப்பங்கள வரப்பட்டுள்ளன. மேற்கண்ட 9 மாவட்டங்களில் மட்டும் 40% பேர் விண்ணப்பபித்துள்ளனர்.
கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வுக்குப் பிறகு இந்த தேர்வுக்குத்தான் அதிகளவில பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ளவர்களில் 47 சேதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
219 தாலுக்காக்களில் உள்ள துணை மையங்களில் 50,000 அறைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். வெளிப்படையாக, நியாயமாக இந்த தேர்வு நடத்தப்பயடும். அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் தேர்வுகளை ஆட்சியர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் முறைகேடுகள் ஏதும் இன்றி தேர்வு நடத்தப்படும். அப்படி தேர்வில் யாரேனும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த மையங்களில் கீழ்த்தளங்களில் தேர்வு அறை அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)