Tuesday, August 28, 2012

thumbnail

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி: 24,000 பணியாளர்களை நீக்க முடிவு

நியூயார்க்: கம்ப்யூட்டர் உற்பத்தி மற்றும் சாப்ட்வேர் நிறுவனமான எச்.பி (Hewlett-Packard) கடந்த காலாண்டில் ரூ. 45,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஈடிஎஸ் நிறுவனத்தை வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு ரூ. 70,000 கோடி செலவு ஏற்பட்டதாலும் கம்ப்யூட்டர் விற்பனை சரிந்ததாலும் அந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த பெரும் நஷ்டம் காரணமாக பல நாடுகளிலும் பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான எச்.பியில் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 8 சதவீதம் ஊழியர்களை அதாவது, 24,000 பேரை, பணி நீக்கம் செய்ய எச்.பி. முடிவு செய்துள்ளது.

எச்.பியின் கம்ப்யூட்டர்கள் விற்பனை கடந்த காலாண்டில் 10 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக பொருளாதார தேக்க நிலையை சந்தித்து வரும் ஐரோப்பாவிலும், கடும் போட்டி காரணமாக சீனாவிலும் இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About