அசாம் மாநிலம் போடோலேண்ட் பிராந்திய நிர்வாகத்தில் உள்ள மாவட்டங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கி உள்ளது. இங்குள்ள போடோ மற்றும் பிற பழங்குடி மக்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு தாக்குதல் நடத்தும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பழங்குடி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
‘வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அப்பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்த உத்தரவிடவேண்டும்.
கலவரத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் குறைகளை களைய மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போடோ பகுதியில் ஊடுருவிய நபர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும். அத்துடன் அவர்கள் வசித்த இடங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஜனஜதி தர்ம சமஸ்கிருத சுரக்சா மஞ்ச் அமைப்பின் தலைவர் பி.பி.ஜமாடியா தெரிவித்தார்.
முன்னதாக மஞ்ச் அமைப்பின் சார்பில் ஜமாடியா தலைமையில் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கினர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments