Wednesday, August 08, 2012

thumbnail

ஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌விள‌ம்பர‌மு‌ம்!/ The emu. People who trusted the bird and its golden eggs are now queuing up in front of police stations in western Tamil Nadu for their money.


ஈமு கோ‌ழி வள‌‌ர்‌த்தா‌ல் ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் பண‌‌ம் ச‌ம்பா‌தி‌க்கலா‌ம் எ‌ன்ற நடிக‌ர்க‌ளி‌ன் பக‌ட்டு ‌விள‌ம்பர‌த்‌த‌ா‌ல் ல‌ட்ச‌‌க்கண‌க்‌கி‌ல் முத‌லீடு செ‌ய்த பொதும‌க்க‌ள் த‌ற்போது கு‌ப்பாடு போடு‌கி‌ன்றன‌ர். ஈரோடு மாவ‌ட்ட‌ம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செ‌ய்ததே இ‌ந்த கு‌ப்பாடு‌க்கு காரண‌ம்.

பு‌திய பொரு‌‌ட்களை தயா‌ரி‌த்து ச‌ந்தை‌க்கு கொ‌ண்டு வரு‌ம் ‌நிறுவன‌ங்க‌ள், பொதும‌க்க‌ள் ம‌த்த‌ி‌யி‌ல் த‌ங்க‌ள் பொரு‌ட்களை ‌பிரபல‌ப்படு‌த்த நடிகை, நடி‌க‌ர்களை நாடு‌கி‌ன்றன‌ர். இ‌ப்படி ‌‌விள‌ம்பர‌த்‌தி‌ல் வரு‌ம் நடிக‌ர்களை ந‌ம்‌பி பொதும‌க்களு‌ம் அ‌ந்த பொரு‌ட்களை வா‌‌ங்‌கி ‌விடு‌கி‌ன்றன‌ர். கடை‌சி‌யி‌ல்தா‌ன் தெ‌ரி‌கிறது அ‌ந்த பொரு‌ட்க‌ள் அனை‌த்து‌ம் போ‌லியானவை எ‌ன்று. அதேபோலதா‌ன் த‌ற்போது ஈமு கோ‌ழி வள‌ர்‌ப்பு ‌விள‌ம்பர‌மு‌ம்.

ஈமு கோ‌ழி வள‌ர்‌த்தா‌‌ல் ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌‌ல் பண‌த்தை ச‌ம்பா‌தி‌க்கலா‌ம் எ‌ன்று ஈமு கோ‌ழி வள‌ர்‌ப்பு ‌நிறுவன‌ம் த‌மிழக நடிக‌ர், நடிகைக‌ள் வை‌த்து ‌பிரபல‌ப்படு‌த்‌தியது. இ‌ந்த ‌விள‌ம்பர‌த்‌தி‌ல் அ‌திக பண‌த்தை வா‌ங்‌‌‌கி‌க் கொ‌ண்டு ந‌ம்ம நடிக‌ர், நடிகைக‌ள் நடி‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர். அ‌ந்த வகை‌யி‌ல் ஈமு கோ‌ழி ‌‌விள‌ம்பர‌த்‌தி‌ல் நடிக‌ர்க‌ள் பா‌‌ர்‌த்‌‌தீ‌ப‌ன், பா‌க்‌கியரா‌ஜ், தலைவாச‌ல் ‌வி‌ஜ‌ய், பறவை மு‌னிய‌ம்மா, டெ‌ல்‌லி கணே‌ஷ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் நடி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌தி‌ல், நடிக‌ர் பா‌ர்‌த்‌தி‌ப‌ன் சேல‌் மாவ‌ட்ட‌ம் மே‌‌ட்டூ‌ரி‌ல் உ‌ள்ள 'பே‌பி ஈமு பா‌ம்‌ஸ் மே‌ட்டூ‌ர் டே‌ம்' எ‌ன்ற த‌னியா‌ர் ‌நிறுவன‌த்து‌க்கு ‌வி‌ள‌ம்பர‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌விள‌ம்பர‌‌ம், வா‌ழ்‌க்கை வாழ‌த்தா‌ன், வா‌ழ்‌ந்து ஜெ‌யி‌க்க‌த்தா‌ன் எ‌ன்ற பாடலு‌ட‌ன் தொட‌‌ங்கு‌கிறது. ‌பி‌ன்ன‌ர், மு‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து கோ‌ழி வ‌ந்‌தி‌ச்சா, கோ‌ழி‌யி‌‌லிரு‌ந்து கு‌ஞ்சு வ‌ந்‌தி‌ச்சா எ‌ன்று குழ‌ந்தைக‌ள் கே‌ட்க அ‌த‌ற்கு நடிக‌ர் பா‌ர்‌த்‌தீப‌ன், மு‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து கோ‌ழி வ‌ந்‌திரு‌க்கலா‌ம் ஆனா‌ ஈமு கோ‌ழி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் இலாப‌ம் வ‌ந்தது எ‌ன்‌கிறா‌ர்.

‌பி‌ன்ன‌ர், ரு‌க்‌கு ரு‌க்‌கு ஈமு, கோடி கோடி கொ‌ட்டுது‌ங்கு இலாப‌ம், கொ‌க்க‌ர‌க்ரோ கொ‌க்கோ எ‌ன்ற பாடலுட‌ன் '‌கோ‌ழினா ஈமு பே‌பினா இல‌ா‌ப‌ம்' விள‌ம்பர‌‌த்தை முடி‌த்து வை‌க்‌கிறா‌ர் பா‌ர்‌த்‌‌தீ‌ப‌ன்.

இ‌ப்படி ‌பிரபல நடிக‌ர்க‌ள் நடி‌த்து‌ள்ள ‌விள‌ம்பர‌த்தை பா‌ர்‌த்து பொதும‌க்க‌ள் ந‌ம்‌பி இ‌ந்த தொ‌ழி‌லி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன‌ர். பண‌த்தை வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு 5 ‌நி‌மிட ‌விள‌ம்பர‌த்த‌ி‌ல் நடி‌த்து ‌வி‌ட்டு செ‌ன்று ‌‌விடு‌கி‌ன்றன‌ர் நடிக‌ர்க‌ள். த‌ற்போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பொதும‌க்க‌ள்த‌‌ா‌ன்.

ஈரோடு மாவ‌ட்ட‌ம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர்பொதும‌க்க‌ளிட‌ம் ரூ.200 கோடி மோசடி செ‌ய்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பையு‌ம் அ‌தி‌ர்‌‌ச்‌சியையு‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தன‌ர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About