Showing posts with label latest tamil news. Show all posts

Thursday, June 21, 2012

thumbnail

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது.
கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், அணையின் விளைவாய் பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும் எனவும் ஜெயலலிதா கூறுகிறார்.
அட்டப்பாடி நீர்ப்பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே 4.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையினைக் கட்ட திட்டமிடுகிறது.
காவிரி நடுவர் மன்றம் முன்பும் 4.5 டி.எம்.சி அளவு நீரை அட்டப்பாடி திட்டத்திற்காக கேரளா கோரியிருந்தது.
ஆனால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடிக்காக 2..87 டி.எம்.சி அளவுதான் நீர் ஒதுக்கமுடியும் எனக்கூறிவிட்டது.
நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து கேரளாவும், கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்திருக்கின்றன.
அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, கேரளா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மீறி சிறுவாணியில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
எனவே, மத்திய அரசு கேரளம் அவ்வாறு அணை கட்டக்கூடாது என அறிவுறுத்தவேண்டும், மத்திய நீர் ஆணையம் அவ்வாறு அணை கட்ட அனுமதியளிக்கக்கூடாது எனவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக நேற்று புதன்கிழமை, அணை கட்டும் பணியின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவென அட்டப்பாடி சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சித்தூர் என்ற பகுதி அருகே பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
பின்னர் கேரள போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்துவந்து அதிகாரிகளை மீட்டு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பிவைத்தனர்.

Friday, June 08, 2012

thumbnail

சானியா-பூபதி ஜோடி சாம்பியன்:பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா-மகேஸ் பூபதி ஜோடி போலந்தின் கிளாடியா-மெக்ஸிகோவின் சான்டியாகோ ஜோடியை எதிர்கொண்டது.


நேற்று நடந்த இந்த இறுதிப்போட்டியில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போலந்து-மெக்சிக்கோ ஜோடியை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி பட்டம் வென்றுள்ளனர்.



சானியாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இதே வெற்றி தொடர தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த போட்டித்தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டிக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, இத்தாலியின் சரா எர்ரானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மோதும் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறும்.

Friday, June 01, 2012

thumbnail

தமிழகத்தில் தாமதமாக துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 5ம் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. அதன்பின் படிப்படியாக அதிகரித்த அக்னி வெயில், அனல் காற்றுடன் சுட்டெரித்தது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வறுத்தெடுத்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் இந்த நிலை நீடித்தது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் சற்று தாமதமாக, வரும் 5ம் துவங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லை என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, ஊட்டி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும். இதன் மூலம் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் 1ம் தேதி பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தாமதமாக 5ம் தேதி பெய்யலாம். தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கேரளாவில் மழை பெய்தால், குற்றாலத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அங்கு சீசனும் களைகட்டும்,' என்றார்

Sunday, May 27, 2012

thumbnail

தமிழக சட்டசபையில் அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள்

சென்னை,  தமிழக சட்டசபையில்  அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.. தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கிடந்த தமிழகத்தை மீட்டு முதலமைச்சர் தலைமையில் ஒரு மிகச் சிறந்த நல்லாட்சி மக்கள் போற்றுகின்ற மகத்தான ஆட்சி நடைபெற்று வருவதாக அவர்கள் புகழ்ந்தனர் சூட்டினார்கள்.

தமிழக அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை வரவேற்று, பாராட்டி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள். தலைவர்களின் பேச்சு வருமாறு: செ.கு.தமிழரசன் (அகில இந்திய குடியரசு கட்சி): தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சி திருநாள். நாடு போற்றும் வகையில் சிறப்பானதொரு ஆட்சியை முதலமைச்சர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.இன்று காலை முதலமைச்சரின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு வரும் வழிநெடுக மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி வரவேற்றதை காண முடிந்தது.
அந்த கடற்கரையோரம் குடிகொண்டுள்ள அண்ணாவும், எம்ஜிஆரும் கூட அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.ஒருநல்ல அரசுக்கு உதாரணம் அந்த அரசு மக்களுக்கு நன்மை செய்கிற அரசாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறும் அரசாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார். அது போன்ற மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக மக்களுக்கு நாள்தோறும் நன்மைகள் செய்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்று இந்த ஓராண்டு ஆட்சி சாதனைகளை செய்தித்துறை 7 நூல்களாக கொடுத்திருக்கிறது. பத்திரிகைகளிலும் 4 முழு பக்க விளம்பரமாக கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி இந்த சாதனைகளை பதிவு செய்வதுதான் நாளைய வரலாற்றுக்கு ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிலைத்த, புகழ்மிக்க முதலமைச்சராக நிச்சயம் இவர் அடையாளப் படுத்தப்படுவார். ஆட்சி திறனும், மாட்சிமையும், தனித்துவமும் மிக்க தலைவராக ஒரு தலை சிறந்த தேசியவாதியாக சமூக, சமத்துவவாதியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவேன் என்ற வாக்குறுதிபடி மிக தாராளமாக, ஏராளமான நலத்திட்டங்களை தந்துள்ள இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும். இந்த ஆட்சியும் தொடர்ந்து nullடிக்க வேண்டும். உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை): வாக்களித்த தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தந்து வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார். மீனவர்கள் உயிர் காக்கவும், உடமை காக்கவும் வழிவகை கண்டார். இதே சட்டப் பேரவையில் இலங்கை தமிழர்கள் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்த கருணை உள்ளத்தோடு தீர்மானம் கொண்டு வந்தார்.

Thursday, May 24, 2012

thumbnail

வரும் மே 31 ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த்


புதுடில்லி: யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திடீரென பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தியதற்கு நாழு தழுவிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்கள் மே<லும் விலை அதிகரித்து மக்களை நேரிடையாக பாதிக்கும் என்றும் எனவே பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் மே 31 ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடந்த பா..,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு அநாவசிய செலவுகளை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் உலக அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் பெட்ரோல் வாங்குவதற்கு கூடுதல் நிதி செலவினம் ஏற்பட்டுள்ளது.


இதனை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7. 50 பைசா உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும்எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பொதுமக்களின் கண்ணீரை வரவழைத்தால் ஆட்சி வீழ்ச்சி அடையும் என தமிழக முதல்வர் ஜெ., கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

கண்துடைப்பு நாடகம் இது : சரத்பவார் ஆவேசம் ; இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கன்வீனரும், ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான சரத்யாதவ் நிருபர்களிடம் கூறுகையில்: பெட்ரோல் விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. பார்லி., நடந்து கொண்டிருக்கும் போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கூட்டம் முடிந்த பின்னர் அறிவிப்பது ஏன் ? இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம் என மத்திய அரசு கூறுகிறது. இது வெறும் கண்துடைப்புபேச்சு. பெட்ரோல்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 31 ம் தேதி பாரத் பந்த் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக ஏனைய தே.., கூட்டணி கட்சியினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு விட்டது. எதிர்கட்சியினரிடமும் பேசி ஆதரவு திரட்டவுள்ளோம். இவ்வாறு சரத்யாதவ் தெரிவித்தார்.

மாத இறுதி நாளில் பந்த் நடத்தப்படுவதால் பல்வேறு வர்த்தகம், சம்பள பட்டுவாடா கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என வணிக நிறுவனங்கள், வங்கிகள் கவலை அடைந்துள்ளன.

Wednesday, May 23, 2012

thumbnail

மும்பை இண்டியன்ûஸ வெளியேற்றியது சூப்பர் கிங்ஸ்-ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில்

பெங்களூர், மே 23: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் (வெளியேற்றும் சுற்று) 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிர்ச்சித் தொடக்கம்: பெங்களூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் டூபிளெஸ்ஸூக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங், சென்னையை பேட் செய்ய அழைத்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய குல்கர்னி, முரளி விஜய் (1), ரெய்னா (0) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசியுடன் இணைந்தார் பத்ரிநாத். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. 39 பந்துகளைச் சந்தித்த பத்ரிநாத் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். மைக் ஹசி 39 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடி ரன் மழை: பின்னர் வந்த ஜடேஜா ஒரு ரன்னில் வெளியேற, தோனியுடன் இணைந்தார் பிராவோ. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய தோனி, குல்கர்னி வீசிய 16-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். தோனிக்கு இணையாக பிராவோ விளாசலில் இறங்க கடைசிக் கட்டத்தில் சென்னையின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் பிராவோ இரு பிரமாண்ட சிக்ஸர்களை விளாச 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். தோனி 20 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51, பிராவோ 14 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் குல்கர்னி 4 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மலிங்கா 4 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கியபோதும், விக்கெட் எடுக்கவில்லை.சச்சின் பரிதாபம்: பின்னர் பேட் செய்த மும்பை அணிக்கு அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுத்தார் வேயன் ஸ்மித். ஹில்பெனாஸின் 2-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார். இதனால் தன்னுடைய முதல் இரு ஓவர்களிலேயே 28 ரன்களை வாரி வழங்கினார் ஹில்பெனாஸ். 5-வது ஓவரின் கடைசிப் பந்தில் சச்சின் பரிதாபமாக ரன் அவுட்டானார். 11 பந்துகளைச் சந்தித்த அவர் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களே எடுத்தார். 22 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேற மும்பையின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 6, ரோஹித் சர்மா 14, அம்பதி ராயுடு 11, பிராங்க்ளின் 13, ஹர்பஜன் சிங் 1, போலார்டு 16, மலிங்கா 17 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது மும்பை. சென்னை தரப்பில் மோர்கல், பிராவோ ஆகியோர் தலா இரு விக்கெட் வீழ்த்தினர். 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கிய ஹில்பெனாஸ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 59: தோனி-பிராவோ ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. ஆனால் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 59 ரன்கள் குவித்தது தோனி-பிராவோ ஜோடி. டெல்லியுடன் நாளை மோதல்: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றுக்கான 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி டேர்டெவில்ûஸ சந்திக்கிறது சூப்பர் கிங்ஸ். இதில் வெற்றிபெறும் அணி இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை சந்திக்கும்.சுருக்கமான ஸ்கோர்சென்னை-187/5 (தோனி 51*, மைக் ஹசி 49, பத்ரிநாத் 47, பிராவோ 33*, குல்கர்னி 3வி/46)மும்பை-149/9 (ஸ்மித் 38, பிராவோ 2வி/10, அல்பி மோர்கல் 2வி/31)தோனி அடித்த சூப்பர் சிக்ஸ்பிராங்க்ளின் வீசிய 15-வது ஓவரின் கடைசிப் பந்தில் இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார் தோனி. அந்த பந்து மைதானத்தின் மேற்கூரைக்கு வெளியே சென்றது. இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட பிரமாண்ட சிக்ஸர் (112 மீ.) இதுதான். இதன்மூலம் கெயிலின் சிக்ஸர் சாதனையையும் (அதிகபட்ச தூரம் 111 மீ.) அவர் முறியடித்தார். 2-வது அதிவேக அரைசதம்20 பந்துகளில் அரைசதம் கண்டதன் மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் அதிவேக அரைசதம் கண்டவர்கள் வரிசையில் சேவாக்குடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் தோனி. ராஜஸ்தானின் ஓவைஸ் ஷா 19 பந்துகளிலும், டெல்லியின் சேவாக் 20 பந்துகளிலும் அரைசதம் கண்டுள்ளனர். முந்தைய ஆட்டத்தில் சரியாக விளையாடாதபோதும், தனக்கே உரிய பாணியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றித்தேடித்தந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார் இந்த அதிர்ஷ்டக்கார கேப்டன் தோனி.
thumbnail

நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் மத்திய அரசு அதிரடி பெட்ரோல் விலை ரூ.7.53 உயர்ந்தது

புதுடெல்லி : இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், வாட் வரி சேர்த்து சென்னையில் லிட்டருக்கு ரூ.7.53 விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட்ட  பின்னர்  இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வதற்கு அதிகாரம் தரப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை டிசம்பர் வரை பல முறை உயர்த்தப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் அதன் பிறகு விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கியது. எண்ணெய் நிறுவனங்களுக்கு  வாய்மொழியாக தடை விதித்தது. பின்னர் நாடாளுமன்றம் கூடியது. அப்போது விலையை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று மத்திய அரசு மவுனம் சாதித்தது.

இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதனால் பெட்ரோல் விலை மீது லிட்டருக்கு நஷ்டம் ரூ.7.17 ஆனது. அப்படி 5 மாதங்களாக ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ரூ.1 சேர்த்து லிட்டருக்கு ரூ.8.17 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பீடு அதிகரிக்க காரணமானது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததை அடுத்து நேற்று விலை உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தி அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். சென்னையில் வரி சேர்த்து லிட்டர் விலை ரூ.77.53 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வு நேற்று நள்ளிரவே அமலுக்கு வந்தது. இதற்கு  எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன.

Monday, May 21, 2012

thumbnail

ரிலையன்சிற்கு பணத்தை அள்ளி வழங்கும் பிரதமர் அலுவலகம்!


ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா - கோதாவரி டி- 6 பிளாக்கில் இயற்கை எரிவாயு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு இந்திய அரசு ரிலையன்ஸிற்கு பணம் கொடுத்து வருகிறது.

இதில் பலமுறைகேடுகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருவதாக இந்திய தலைமை கணக்குத் துறை ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் எரிவாயுவிற்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவிற்கு விலை ஏற்றித் தரவேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்தது. இந்த புதிய விலையை அரசு ஏற்றால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர்கள் லாபம் கிடைக்கும்.

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஆர்..எல்.-இன் இந்த புதிய கோரிக்கையை உடனடியாக ஏற்க பிரதமர் அலுவலகம் அவசரம் காட்டும் அதே வேளையில், பெட்ரோலியத் துறை அமைச்சகம், மற்றும் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இதில் பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி.யை புறமொதுக்கி, அதன் நலன்களுக்கு எதிராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியை இதில் வளர்த்து வருவது பலநாட்களாக இருந்து வரும் விமர்சனம், அதாவது பயனற்ற விமர்சனம். இதுவரை அரசாலும் எதிர்கட்சிகளாலுமே கண்டு கொள்ளப்படாத விமர்சனமாக இருந்து வருகிறது.

பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகயில், தனியார் நலன்களை அரசு ஏன் காக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பொதுத்துறை நலனை விட ரிலையன்ஸின் நலனே பெரிதாக உள்ளது மத்திய அரசுக்கு என்ற குற்றசாட்டுகள் தற்போது பொது பிரக்ஞையில் பரவலாகி வருகிறது.


தற்போதைய விலை உயர்வு கோரிக்கை குறித்து மார்க்சிஸ்ட் ராஜ்ய சபா எம்.பி. தபன் சென் தீவிர கேள்விகளை எழுப்பி வந்துள்ளபோது பிரதமர் அலுவலகம் இது பற்றிய சட்ட ஆலோசனையை நாடியுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகமும் 8 பில்லியன் டாலர்கள் ரிலையன்ஸிற்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர மற்ற படி நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பெரும் சுமையாகவே போய் முடியும் என்று பல முறை கூறியுள்ளது. அதாவது அதிகாரபூர்வமாகவே கூறியுள்ளது.

தற்போது எம்.எம்.பிடியூ (mmbtu) அளவிற்கு 4.2 டாலர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலை பிப்ரவரி 2014ஆம் ஆண்டு வரை வழங்கப்படுவதாக ஒப்பந்தம், ஆனால் இடையே 8 பில்லியன் கூடுதலாக டாலர்களாக உயர்த்துமாறு ரிலையன்ஸ் கோரியுள்ளது.

தற்போது விலையை ஏற்றிக் கொடுத்தால் அதன் பாதிப்பு உரத்தொழில், மின்சாரம், ஜவுளி உற்பத்தித் துறை ஆகியவற்றிலும் ஏற்பட்டு விலைகள் உயர்ந்து அனைவருக்கும் பெரும் சுமையாகப் போகும் என்று பெட்ரோலிய அமைச்சகம் பல முறை கூறிவிட்டது.

அதாவது தற்போது கொடுக்கப்படும் 4.2 டாலர்களை ரிலையன்ஸ் கோரிக்கையான 14.20 டாலர்களாக அரசு விலை உயர்த்தினால் ரிலையன்ஸ் லாபம் 8 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் ஆனால் லாபப் பகிர்வு ஒப்பந்தங்களின் படி அரசுக்கு வருமானம் 0.438 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த விலைக்கு அரசு சம்மதிக்குமேயானால் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 50 காசுகள் உயரும், அதாவது எரிவாயு விலை உயர்வின் ஒவ்வொரு டாலர் விலை ஏற்றத்திற்கும் யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மின் கட்டணம் உயரும்.

எனவே இதனை அனுமதிக்கக் கூடாது என்று மின் உற்பத்திக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே மூலதனச் செலவுகளுக்குத் தக்கவாறு ரிலையன்ஸ் நிறுவனம் தனது லாபத்தைப் பெருக்கிகொள்ள உதவுமாறு ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளது மாறாக அரசுக்கு அதை ஒப்பு நோக்கும் போது லாபம் மிகக்குறைவு.

துவக்கத்தில் மூலதனச் செலவு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்தது பிறகு 8.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மூலதனச்செலவுகளை ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கு வேண்டப்பட்ட சப் காண்ட்ராக்ட் நிறுவனங்களின் மூலம் அதிகத் தொகை இன்வாய்ஸ் பெற்று அதிகரித்து வந்தது. இது பெட்ரோலிய அமைச்சகத்திற்கும், டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹைட்ரோகார்பன் துறைக்கும் தெரிந்தே நடந்தது. மூலதனச்செலவுகளை அதிக்ரிக்கும்போது ஒப்பந்தங்களின் படி ரிலையன்ஸிற்கு லாபம் பெருகும், அரசுக்கு லாபம் குறையும்.

உற்பத்திப்பகிர்வு ஒப்பந்தங்களில் ஏகபட்ட தகிடுதத்தங்களை ரிலையன்ஸ் செய்துள்ளதை இந்திய தலைமைக் கணக்குத் துறை அம்பலப்படுத்தியது. காரணம் இந்திய அரசின் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் மூலதனச் செலவினங்களை கட்டுப்படுத்த இயலாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவுகள் அதிகரிக்கும்போது அதனை அனுமதிக்கவோ நிராகரிக்கவோ தனிப்பட்ட அதிகாரம் இல்லாமல் உள்ளது உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தம்.

இதன்படியும் லாபப்பகிர்வு ஒப்பந்தங்களின் படியும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளபட்ட அளவுக்கு உற்பத்தி காண்பிக்காவிட்டாலும் அதன் கணக்கில் லாபம் மட்டும் எகிறிக் கொண்டிருக்கும். மேலும் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க முதலில் ரிலையன்ஸ் லாபம் அடையும் அதன் பிறகே அரசுக்கு லாபம் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் உற்பத்திக் குறையும் போது விகிதாசார அளவில் அரசின் லாபம் அதிகரிக்கும்.

மிகவும் சிக்கலான இந்த ஒப்பந்தங்கள் பற்றிய தீவிரமான புரியக்கூடிய பகுப்பாய்வு தேவை. அப்போதுதான் அரசு ரிலையன்ஸ் ஒப்பந்தத்தில் எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறது என்பது, ரிலையன்ஸ் லாபம் பெற அரசு எவ்வளவு கடுமையாக் உழைக்கிறது என்ற விவரமும் மக்களுக்குத் தெரியவரும்.

About