புதுடில்லி: யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திடீரென பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தியதற்கு நாழு தழுவிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்கள் மே<லும் விலை அதிகரித்து மக்களை நேரிடையாக பாதிக்கும் என்றும் எனவே பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் மே 31 ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடந்த பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு அநாவசிய செலவுகளை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் உலக அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் பெட்ரோல் வாங்குவதற்கு கூடுதல் நிதி செலவினம் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7. 50 பைசா உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும்எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பொதுமக்களின் கண்ணீரை வரவழைத்தால் ஆட்சி வீழ்ச்சி அடையும் என தமிழக முதல்வர் ஜெ., கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
கண்துடைப்பு நாடகம் இது : சரத்பவார் ஆவேசம் ; இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கன்வீனரும், ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான சரத்யாதவ் நிருபர்களிடம் கூறுகையில்: பெட்ரோல் விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. பார்லி., நடந்து கொண்டிருக்கும் போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கூட்டம் முடிந்த பின்னர் அறிவிப்பது ஏன் ? இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம் என மத்திய அரசு கூறுகிறது. இது வெறும் கண்துடைப்புபேச்சு. பெட்ரோல்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 31 ம் தேதி பாரத் பந்த் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக ஏனைய தே.ஜ., கூட்டணி கட்சியினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு விட்டது. எதிர்கட்சியினரிடமும் பேசி ஆதரவு திரட்டவுள்ளோம். இவ்வாறு சரத்யாதவ் தெரிவித்தார்.
மாத இறுதி நாளில் பந்த் நடத்தப்படுவதால் பல்வேறு வர்த்தகம், சம்பள பட்டுவாடா கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என வணிக நிறுவனங்கள், வங்கிகள் கவலை அடைந்துள்ளன.
03:23
Tags :
banth
,
latest tamil news
,
latest tamilnadu news
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments