Saturday, May 26, 2012

thumbnail

சென்னை ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டிக்கு ஜோஷ்னா தகுதி

சென்னை, மே.26-

சென்னை ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனகா அலங்காமணி போராடி தோல்வியை தழுவினார். அவரை இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரி 8-11, 11-5, 6-11, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் வென்றார்.

இந்த ஆட்டம் 1 மணி 9 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் போட்டித் தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 13-11, 11-4, 11-8 என்ற நேர் செட்டில் எகிப்தின் சல்மா ஹனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா, போட்டித்தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள சாரா ஜேன் பெர்ரியை சந்திக்கிறார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About