Tuesday, May 15, 2012

thumbnail

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மூன்றாவது முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்றுள்ளது.கடந்த ஓராண்டாக அரசுச் செலவில் ஆடம்பர விழா இல்லாதது ஒரு வரலாற்றுச் சாதனைதான்.

தமிழகத்தின் முதல்வராக, முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மூன்றாவது முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்றுள்ளது.  ÷1991, 2001-ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சவாலான பல சாதனைகளை நிகழ்த்தினார். குறிப்பாக, சமூக நீதியை நிலைநாட்ட 60 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு பெற்றுக் கொடுத்தார். முத்தமிழோடு அறிவியல் தமிழையும் சேர்த்து நான்காம் தமிழ் அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து 8-ஆம் உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சையில் நடத்தினார்.  ÷விளையாட்டு வீரர்கனையும், விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுக்கென உலகத்தரம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை, மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடித்தார். தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியையும் நடத்தினார்.  ÷மகளிர் எல்லா நிலைகளிலும் உயர்வு பெற வேண்டும் என பேசுவதோடு நின்றுவிடாமல் செயலிலும் ஈடுபட்டு, காவல் துறையில் பெண்கள் சேர்ந்து பணியாற்றும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்துக் கொடுத்தார்.  ÷பெண் குழந்தைகள் என்றால், கள்ளிப்பால் கொடுத்தும், நெல்லைப் பாலில் கலந்து புகட்டியும் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் நிலை பரவலாக இருந்த நிலையில், அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் கொண்டு வந்தார். இந்தத் திட்டம் மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது.  ÷பெண்கள் பொருளாதாரத்தில் வலுவானவர்களாக உருவாக வேண்டும் என்று எண்ணிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, அவர்களுக்கென மகளிர் சுய உதவிக் குழுவினை (1992) ஏற்படுத்தி, சிறப்புச் சலுகைகளை அளித்து அவர்கள் சொந்தக் காலில் நிற்க வழிவகுத்தார். மகளிரை தொழிலதிபர்களாக உருவாக்க அவர்களுக்கென தொழிற்பேட்டைத் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.  ÷சென்னைப் போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், ஓசூர், கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உதவிட, சிறுதொழில் தொடங்கவும் வழிவகுத்தார்.  ÷தொழிற்புரட்சிக்கு வித்திடும் வகையில் தொழிற் பூங்காக்களை உலகத்தரத்தில் உருவாக்கினார். அஃதன்றி காகிதத் தொழிற்சாலை, இரும்புத் தொழிற்சாலை, செம்பு உருக்குத் தொழிற்சாலை ஆகியவற்றுடன், சென்னைக்கு வெளியே ஃபோர்டு கார் தொழிற்சாலை, செல்போன் தொழிற்சாலை, செல்போன் உதிரி பாகத் தொழிற்சாலைகளையும் கொண்டு வந்தார்.  ÷இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடும் நிதி நெருக்கடி நிலவிய நிலை. முந்தைய அரசு வாங்கிய கடனுக்கு அன்றாடம் பெருந்தொகையை வட்டியாக கட்ட வேண்டும். நிலுவையிலுள்ள பில்தொகைகளைக் கட்ட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். இந்த நெருக்கடி நிலைûயைச் சரிகட்ட மதுக்கடை ஏலத்தில் இருந்த "கார்டல்' முறையை அதாவது "சொல்லிவைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கும் நிலை'யை ஒழித்து, மதுக்கடைகளை அரசே நடத்தும் என்று முடிவெடுத்தார்.  ÷அதேபோன்று மணல் குவாரிகளில் இருந்த ஊழல் மற்றும் முறைகேடாக மணல் அள்ளுவது ஆகியவற்றை ஒழிக்க, மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தவும் வழிவகுத்தார். இதன்மூலம் மணற்கொள்ளை ஒழிந்தது. அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இதன் காரணமாகவும் வருவாய் வந்து சேர்ந்தது.  ÷அடுத்தபடியாக வருவாய் இனத்தில் பெரிய பங்களிப்பைச் செய்து வரும் ஒரு துறை விற்பனை வரிவசூல். இதிலிருந்த தேக்கநிலையை நீக்கி, தனது நிர்வாகத் திறமையால் நிலுவையில் இருந்த விற்பனை வரி இனங்களைக் கண்டறிந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார்.  ÷அடுத்து பாமர மக்களின் உழைப்பை உறிஞ்சும் லாட்டரி சீட்டு, ஒரு நம்பர் லாட்டரி என்னும் சுரண்டல் லாட்டரி. இதன்மூலம் உழைப்பாளிகளிடையே பரவும் பெரிய அளவிலான சுரண்டல் சூதாட்டத்தைத் தடுக்க, லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் ஒழித்தார்.  ÷நிதிநிலையைச் சீராக்கிக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தை வரலாறு காணாத சுனாமி தாக்கிற்று. பல்லாயிரக்கணக்கில் உயிர் இழப்பு, பல ஆயிரம் கோடி உடமைகள், சொத்துகள் நாசம். இந்தச் சுனாமிப் பேரலையால் ஏற்பட்ட நாசத்தைக் கண்டறிந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடித்து, நல்லடக்கம் செய்தும், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தும், மனஉளைச்சல்களிலிருந்து மீள அவர்களுக்கு "கவுன்சலிங்' முறையில் மனஇறுக்கத்தை போக்கியும், அக் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பு வழங்கியும், குழந்தைகளை இழந்த பெற்றோர் கருத்தடை செய்து கொண்டவர்கள் என்றால், அவர்களுக்கு மீண்டும் குழந்தைப் பிறக்க அறுவைச் சிகிச்சை மூலம் வழியமைத்தும் முதலமைச்சர் உத்தரவிட்டார். அவர்களுக்கு அரசு சலுகைகள், உதவிகள் மற்றும் குடியிருப்புகள் ஏற்படுத்தி வழங்குதல் என்று அளப்பரிய பணிகள் நடந்தன. கிழக்காசிய நாடுகள் பலவற்றை சுனாமி தாக்கி, அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியா இருந்த நிலையில், அதன் பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டதை பலரும் பாராட்டினர். இவ்வாறாக இயற்கைப் பாதிப்புகள் தொடர்ந்த நிலை.  ÷இந்த நிலையிலும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், பாடநூல் வழங்கும் திட்டம், இலவச பஸ் பாஸ், கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் அன்னதானத் திட்டம் வகுத்தார். புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை மக்களின் குடிநீர்த் தாகத்தை தீர்த்தது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் வறண்டு போன நிலையில், நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்திட மழைநீர் சேமிப்புத் திட்டமும் கொண்டு வந்தார். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களிலும் தத்து எடுத்துக்கொண்ட நல்லதொரு தேசியத் திட்டமாக மாறியது.  ÷ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் ஊராட்சி ஒன்றியம்தோறும் நடைமுறைப்படுத்தும் திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 படுக்கைகள் கட்டாயம் என்ற நிலையை நடைமுறைப்படுத்தியது, பெண்கள் கமாண்டோ படை உருவாக்கியதும் பெண்களுக்கான சிறப்புத் திட்டமாயிற்று. நெசவாளர்கள், விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் பாதுகாப்புத் திட்டம் - என அனைத்துமே பாராட்டுக்குரியத் திட்டமாகவே அமைந்தது.  ÷மூன்றாவது முறையாக முதலமைச்சராக வந்ததும், கொண்டு வந்த உன்னதத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி என்ற சொல்லை மாற்றி விலையில்லா அரிசி. அதேபோன்று "எஃப்எம்ஜி' என்கிற மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம். முழுக்க முழுக்க வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் விவசாயக் குடும்பத்திற்கு 4 ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தை கிராம சபையினர் உதவியுடன் பரம ஏழை யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு மூன்று பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வழங்கப்படுகிறது. இந்த பெண் ஆடுகள் 6 மாதத்தில் இரண்டுக்கு மேற்பட்ட குட்டிகளைப் போடும், நாளடைவில் அது பெருகி, கிராமவாசியின் குடும்பத்தை வளப்படுத்தும் நிலையில் ஆடுகளை விற்கக் கூடாது என்றும் குட்டிகளை அடுத்த ஆண்டில் விற்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதேபோன்று ஏழை விவசாயிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவரைக் கிராமசபை கண்டுபிடித்து, சபை குறிப்பிடும் நபருக்கு ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் ரூபாயை நேரடியாக வழங்காமல் "ஜெர்சி' வகை மாடுகள் இருக்குமிடமான மைசூரையடுத்த ராம்நகர் பகுதிக்குச் சென்று, விவசாயி நேரடியாக விலை பேசி முடிவானால், அந்த கறவை மாட்டுக்கு உண்டான விலையை குறைத்து 25 ஆயிரம் ரூபாய் என்று வாங்கினால், ஒதுக்கப்பட்ட தொகையில் மீதமுள்ள ரூபாய் பத்தாயிரத்துக்குண்டான காசோலையை, விவசாயியிடமே அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். கறவை மாடு வாங்குவதற்கு முன்னதாக அந்த மாடு எத்தனை லிட்டர் பால் கறக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தத் தேவையான நாட்கள் அந்தப் பகுதியிலேயே தங்கும் செலவையும் அரசு ஏற்பதெல்லாம் முற்றிலும் புதிய நடைமுறை.  ÷இளநிலை, டிப்ளமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதுடன் 4 கிராம் தங்கம் வழங்கவும் ஆணையிட்டார்.  ÷அதுமட்டுமின்றி கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்கு மாத உதவித்தொகையாக ரூ.500லிருந்து உயர்த்தி ரூ.1,000 வழங்கவும் ஆணை.  * விவசாயிகளுக்கு உழவர் பெருவிழா.  * அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம்.  * மீனவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு.  * கல்வியில் புரட்சியை ஏற்படுத்த "கிரேடு முறை'.  * மாணவ மாணவிகளுக்கு சாப்பாடு, உடை, புத்தகம், பை, பென்சில், அகராதி அனைத்தும் இலவசம்.  * இலங்கைத் தமிழர்களுக்கும் சலுகைகள்.  * கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல நிதியுதவி.  * இஸ்லாமிய சேர்ந்த உலமா, மோதினார் அரபி ஆசிரியர்களுக்கு ரூ.1,000 ஓய்வூதியம்.  * விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  * அரசுப் பணியில் உள்ள தாய்மார்களுக்கு மகப்பேறு சலுகையான 3 மாத விடுப்பு 6 மாதமாக உயர்த்துதல்.  ÷இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023 - அமைந்துள்ளது. அதைவிடவும் முக்கியமானதாக கருதப்படுவது கடந்த ஓராண்டாக அரசுச் செலவில் ஆடம்பர விழா இல்லாதது, இதுவே ஒரு வரலாற்றுச் சாதனைதான்.  

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About