புதுடெல்லி, மே.26 -
ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுப்ரமணியசாமி இவ்வழக்கு குறித்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாக உச்ச நீதிமன்றத்ததில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இவ்வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என புதிய மனுவில் கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். இதை ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி யார் வேண்டுமானாலும் இதில் மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார்.
சி.பி.ஐ. இந்த வழக்கு குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இதில் தயாநிதி மாறன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவன அதிபரை மிரட்டியதாகவும் மலேசிய நிறுவனத்திற்கு பங்குகளை விற்பனை செய்ய வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
05:11
Tags :
aircell
,
latest news tamilnadu .tamilan
,
swamy
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments