ஆற்று நீரில் விஷம் கலந்து ஊர் மக்களை கூண்டோடு அழிக்க நடந்திருக்கும் சதி தமிழகத்தை அதிர வைத்துள்ளது. நியுயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதவிட்டு பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய அல்கய்தா பயங்கரவாதிகளுக்கு கூட தோன்றாத மிக கொடூரமான சிந்தனை இது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் பாலாறு கரையோரம் உள்ள கிராமங்களின் மக்கள் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். பாலாற்றில் உள்ள நான்கு கிணறுகளில் எடுத்து வினியோகித்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகப்பட்ட ஊராட்சி தலைவர்கள் உடனே உஷாரானதால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. வீடுகளுக்கு வினியோகித்த தண்ணீரை குடிக்க வேண்டாம், சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என இரவோடு இரவாக வீதிகள் தோறும் முரசடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தபோது, தண்ணீரில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
குடிநீர் வாரியமும் தீயணைப்பு துறையும் ஊராட்சி நிர்வாகிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டுள்ளன. காவல்துறை மீது அந்த பகுதி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. காரணத்தை கண்டுபிடிப்பது கடினமல்ல. குடிநீரில் விஷம் கலக்கும் அளவுக்கு துணிந்தது ஆற்று மணலை சுரண்டி எடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் என மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து புகார்கள் கொடுத்தும் காவல், வருவாய் துறைகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே ஒன்று சேர்ந்து மணல் வண்டிகளின் வழித்தடங்களை சங்கிலியால் அடைத்துவிட்டனர். அதனால் ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளையர்கள் தண்ணீரில் விஷம் கலந்துள்ளனர் என்று அவர்கள் நம்புகின்றனர். மணல் கொள்ளையில் பணம் கொட்டுகிறது. அதன் ஒரு பகுதி அரசு எந்திரத்தின் அடிமட்டம் தொடங்கி மேலிடம் வரை பாய்வதாக நீண்டகாலமாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மணல் கொள்ளையே நடக்கவில்லை என கூறிய முதலமைச்சர், தினகரன் வெளியிட்ட முழுப்பக்க புலனாய்வு செய்தியை தொடர்ந்து, குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் பாயும் என எச்சரித்துள்ளார். அதன் பின்னரும் மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி கொலைகாரர்களாக மாற துணிந்திருப்பது தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்.

04:27
Tags :
cm
,
sand scandal
,
Tamilnadu
,
tamilnadu latest news
,
water contamination
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments