குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 2 ஆயிரத்து 795 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப் 1 பிரிவின் கீழ் வரும் 131 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ல் நடந்தது. இந்தத் தேர்வுக்கு 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 98 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த 13-ம் தேதி தினமணி நாளிதழிலில் குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் தாமதம் குறித்த செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை (மே 18) முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு எப்போது? முதல்நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற்று முதன்மைத் தேர்வு எழுத 2 ஆயிரத்து 795 பேர் தகுதி பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வு ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுக் கால அட்டவணையின்படி, முதன்மைத் தேர்வு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments