சென்னை, மே. 17-
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது. இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.
09:42
Tags :
ambethkar cartoon
,
court order
,
latest tamilnadu news
,
tamil nadu
,
traffic police
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments