வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு தொடர்பான முழு விவரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
ஆனாலும் பிரணாபின் வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் பதுக்கியவரக்ளின் பெயர்களையோ, இந்தியப் பணம் எவ்வளவு கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையோ பிரணாப் அளிக்காமல் இருந்தது ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிக்க லோக்பால், லோகாயுக்தா போன்ற சாத்தியங்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டப்படும் என்று கூறியுள்ளார் பிரணாப்.
மேலும் கறுப்புப் பணம் எவ்வளவு என்ற அரசின் உத்தேசத்தையோ, அதாவது வெளிநாடுகளில் உள்நாட்டில் உள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்ற விவரத்தையும் பிரணாப் அளிக்கவில்லை.
97 பக்க இந்த அறிக்கையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைத்து நிதிமுறைகேடுகள் செய்பவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தண்டனை கொடுப்பதையும் பிரணாப் வலியுறுத்தினார்.
07:36
Tags :
block money
,
india news
,
latest tamilnadu news
,
pranab mukarji
,
tamil nadu
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments